மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 22 April 2019

🌍🌎🌏இன்று உலக புவி தினம்.🌍🌎🌏


      உலக புவி தினம் 49 ஆவது முறையாக இந்த வருடமும் அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித வாழ்வியலின் அடிப்படையான புவி தொடர்பிலான அவதானம் காலம் காலமாக வௌியிடப்பட்டு வருகின்றது.

     புவியின் பாதுகாப்புத் தன்மைகளை கருத்தில் கொண்டு 1970 ஆம் ஆண்டு முதலாவது புவி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

    புவி தினம் அனுஷ்டிக்க ஆரம்பித்து இன்று 50 வருடங்கள் கடந்துள்ள போதிலும் புவியின் பாதுகாப்பு தொடர்பிலான கருதுகோள்கள் பெருமளவில் அதிகரித்துள்ளனவே தவிர புவி வெப்பமடைதல் போன்ற இயற்கைக்கு ஒவ்வாத காரணிகளை மனிதன் அதிகளவில் செயற்படுத்தியே வருகின்றான்.

  புவியின் சுற்றுசூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் முன்னெடுக்கப்படும் விசேஷ நாளாக புவி தினம் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி உருப்பெற்றது.

    1969 ஆம் ஆண்டு சான்பிராஸ்ஸிஸ்கோ நகரில் இடம்பெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் புவி நாளை அனுஷ்டிப்பது தொடர்பிலான வித்தினை உலக அமைதிக்காக குரல் கொடுத்த ஜோன் மெக்கனல் எனும் மாமனிதர் இட்டார்.

      1970 இல் ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுசூழலியல் நிபுணர் கோலார்ட் நெல்சன் சுற்றுசூழலின் மகத்துவத்தை பரப்புவதற்கான சிறந்த நாளாக 1970 ஏப்ரல் 22 ஆம் தேதி அழைப்பு விடுத்தார்.

   இந்த நாளில் புவியின் வட கோளப்பகுதி வசந்தமாகவும் தென் கோளப்பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படும்.

     நெல்சனின் அழைப்பினை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர்.

    அன்று முதல் உலக புவி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

      8 பில்லியன் மரங்களை எதிர்வரும் 5 வருடங்களுக்குள் நாட்டுவதும் புவியை சுத்தமாகவும் இயற்கை வனப்புடனும் பேணுவது இந்த புவி தினத்தின் கருதுகோளாகும்.

Pages