🌞 தண்ணீருக்குப் பதிலாக தாதுக்கள் சேர்க்கப்பட்ட, உப்பு சேர்க்கப்பட்ட தண்ணீரை குடிக்கலாம்.
🌞 அசதியாக இருப்பவர்கள் குளுக்கோஸ் கலந்த நீர் பருகலாம்.
🌞 எலுமிச்சை, கிர்ணி, தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களின் பானங்களை பருகலாம்.
🌞 இளநீர் பருகலாம். வெள்ளரிக்காய், நுங்கு சாப்பிடலாம்.
🌞 காலையும், மாலையும் தலைக்கு குளியல் போடலாம்.
🌞 வாரத்தில் ஒரு முறையாவது மூலிகை எண்ணெய் தேய்த்து குளித்து உடல் சூட்டை தணிக்கலாம்.
🌞 உடலில் சந்தனம் மற்றும் மஞ்சள் பூசிக் கொள்ளலாம்.
🌞 பழங்களை அதிகமாக சாப்பிடலாம்.
🌞 தண்ணீருடன் சேர்ந்த பழஞ்சோறு நல்லது. கூழ் - களி வகைகளை சாப்பிடலாம்.
🌞 வெயிலில் செல்ல நேர்ந்தால் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.