காமிக்ஸ் சிறு குழந்தைகளுக்கு மட்டுமா என்றால்... நிறைய பேர் ஆம் என்றே பதில் கூறுவர்.
7 முதல் 77 வயது வரை என அனைத்து வயதினருக்கும் ஏற்றதே காமிக்ஸ்.. 1970 களிலும் 80களிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் வரைகதை வாசிப்பு உயர்ந்து இருந்தது. பின்னர் தொலைக்காட்சி, கேபிள் தொலைக்காட்சி போன்றவற்றின் வருகையால் நலிந்தது.
இந்த சம்மரை காமிக்ஸ் புத்தகங்களோடு கொண்டாடுங்கள்.. பிள்ளைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குப்படுத்துவோம்..🌹
சிறந்த காமிக்ஸ் பதிப்பகத்தார் பற்றிய தகவல்கள் இங்கே...📚📚📚
1972ல் தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு இரும்புக்கை மாயாவியை அறிமுகம் செய்ததோடு துவக்கம் கண்டது முத்து காமிக்ஸ்! குடும்பத்தில் அனைவரும் படிக்கக்கூடிய தரத்திலான சர்வதேசச் சித்திரக்கதைகளை அழகுத் தமிழில் வெளியிடுகிறது. 1984ல் லயன் காமிக்ஸ் எனும் புதியதொரு இதழும் உருவாக்கப் பட்டத்தைத் தொடர்ந்து உலகின் தலைசிறந்த பல காமிக்ஸ் தொடர்கள் சரமாரியாய் தமிழாக்கம் கண்டு வருகின்றன!
பெரும்பாலான இதழ்கள் அமெரிக்க, ஐரோப்பிய வரைகதைளில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. இரும்புக்கை மாயாவி, மாயாவி, ஆர்ச்சிபோன்ற பாத்திரங்கள் புகழ்பெற்றவை.
2012 முதல் முழு வண்ணத்தில், உயர் தர ஆர்ட் பேப்பரில் அற்புதமாய் வெளியீடுகள் வந்து கொண்டுள்ளன! நேரடிச் சந்தாக்கள், ஆன்லைன் விற்பனைகள் என்பதே தற்சமயத்து விநியோக முறைகள் என்பதால் அவை தொடர்பான விபரங்கள் அனைத்தும் இங்கே உள்ளன!
பிரகாஷ் பப்ளிஷர்ஸ்:
பதிப்பாசிரியர்:
திரு. S. விஜயன்
முகவரி:
Prakash Publishers, #89, Chairman PKSAA Road, Ammankoilpatti, Near Mariyamman temple, Sivakasi, PIN 626 189, Tamilnadu.
திரு. S. விஜயன்
முகவரி:
Prakash Publishers, #89, Chairman PKSAA Road, Ammankoilpatti, Near Mariyamman temple, Sivakasi, PIN 626 189, Tamilnadu.
தொலைபேசி:
(Tel) 04562 - 272649(Mob) 98423 19755 & 73737 19755(Fax) 04562 - 275159
எடிட்டரின் வலைப்பூ:
இணையத் தளம்:
ஆன்லைன் விற்பனை:
மின்னஞ்சல்:
முகநூல் பக்கம்: