மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 6 April 2019

தண்ணீரை கூடுதலாக அருந்துவது நல்லதா?


     சாதாரணமாக நடுத்தர வயது மனிதனின் உடலில் 60 சதவீதம் நீர் உள்ளது. மனிதன் உயிர்வாழ நீர் அவசியம். வளர்சிதை மாற்றம், பளபளப்பான சருமம் மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றல் போன்றவற்றுக்கும் நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பதும் மிகவும் அவசியமானது ஆகும்.

      'டயட்டில் இருக்கிறேன்" என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவது உயிருக்கே ஆபத்து என்று ஆய்வில் சொல்கிறார்கள். தண்ணீர் குடித்து எடையை குறைக்கலாம் என்று நினைத்து அதிகமாக தண்ணீர் அருந்துவது தவறு. ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம் என்பதை அவரவரின் எடை, செய்யும் வேலையைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும்.

       80 கிலோ எடை உள்ள ஒருவர், 200 கிலோ எடை உடையவர் அருந்தும் நீரின் அளவை எடுத்துக் கொள்ளக்கூடாது. 80 கிலோ எடை இருந்தால், சுமார் 1¼ லிட்டர் தண்ணீர் அருந்தலாம். நீங்கள் செய்யும் வேலையைப் பொறுத்து குடிக்கும் நீரின் அளவை மாற்றிக் கொள்ளவேண்டும்.

      ஏசி அறையில், கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்பவராக இருந்தால் குறைந்த அளவே தண்ணீர் அருந்தினால் போதும். கடினமான வேலை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால் ½ லிட்டர் தண்ணீரை கூடுதலாக அருந்துவது நல்லது.

        உங்களால் சரியான அளவை பின்பற்ற முடியவில்லை என்றால், இதோ இந்த சின்ன விஷயங்களை கடைப்பிடித்தாலே நாளொன்றுக்கு தேவையான நீரை பருக முடியும். காலை எழுந்தவுடன் 1 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். உணவு வேளைக்கு அரைமணி நேரத்துக்கு முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு உண்டு முடித்தப் பின் அரைமணி நேரம் கழித்து 2 டம்ளர் நீர் அருந்துங்கள். மேலும், உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். வெளியில் செல்லும் போது உங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.

       நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்தும் அதிகப்படியான நீர் கிடைப்பதால், நேரிடையாக அருந்தும் நீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம். நீர் நம் உடலுக்கு நல்லது என்றாலும் அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். அதற்கும் அதிகமாக அருந்தினால் வேறு பல பிரச்சினைகள் வந்துவிடுகின்றன.

Pages