மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 24 April 2019

🌍 எண்ணம் தான் வாழ்வு..🌹🌹

The Room With 1000 Mirrors !!

    A person said to a Monk that, ′My workers are not true to me. My children, my wife and the entire world is very selfish. No body is correct.′

      Monk smiled and told him a story... In one small village there was a room with 1000 mirrors. One small girl used to go inside and play.! By seeing her reflection on the 1000 mirrors, she was very joyful. She would clap her hands and all the 1000 children would clap back at her. She considered this place as the world′s happiest place and would visit often.

     This same place was once visited by a angry person. He saw around him thousands of angry men staring at him, He got scared and raised his hands to hit them and in return 1000 hands lifted to hit him back. He thought... this is the worst place in the world and left that place.

Moral : ′This world may be heaven or Hell.. Our thoughts will keep us Strong′. 

    ஒரு நபர் ஒரு துறவியிடம் 'என் தொழிலாளர்கள் யாரும் எனக்கு உண்மையாக இல்லை, என் குழந்தைகள், என் மனைவி மற்றும் இந்த உலகமே சுயநலமாக உள்ளது. இங்கு யாரும் சரியாக இல்லை" என்று கூறினார்.

   துறவி சிரித்துக்கொண்டே ஒரு கதையைச் சொன்னார்...

   ஒரு சிறிய கிராமத்தில் 1000 கண்ணாடிகள் கொண்ட ஒரு அறை இருந்தது. ஒரு சிறிய குழந்தை உள்ளே சென்று விளையாடினாள். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவளைச் சுற்றி விளையாடுவதைப் போன்ற தோற்றத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். மகிழ்ச்சியில் அவள் தன் கைகளை தட்டினாள், அவளை தொடர்ந்து 1000 குழந்தைகளும் கைத்தட்டுவது போல் தோன்றியது. அவள் இந்த இடத்தை உலகின் மிக மகிழ்ச்சியான இடமாகக் கருதி அடிக்கடி அந்த இடத்திற்கு வருவாள்.

    இதேபோல் அதே இடத்தை ஒரு கோபமான மனிதர் பார்க்கும்போது அந்த இடம் அவனுக்கு கோபமான இடமாக தெரிந்தது. அவன் அந்த இடத்தை பார்க்கும் போது அவனைச்சுற்றி ஆயிரக்கணக்கானோர் கோபமாக பார்ப்பது போல் தோன்றியது. அவனுடைய பிரதிபலிப்பை கண்டு மிகவும் கோபமடைந்து அவர்களை அடிக்க கைகளை உயர்த்தினான். அவனை சுற்றி இருக்கும் 1000 பேர்களின் கைகளும் உயர்ந்தன. அவன் அந்த இடத்தை உலகின் மிக மோசமான இடமாக கருதி அந்த இடத்தை விட்டு கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தான்.

நீதி : இந்த உலகம் சொர்க்கமாகவும் இருக்கலாம் நரகமாகவும் இருக்கலாம், நம்முடைய எண்ணங்கள் தான் நம்மை வலுப்படுத்தும்... 

Pages