மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 25 April 2019

கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள்


   தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகி போகிவிட்டது.


    அந்த காலங்களில் விடுமுறை நாட்களில் பெரியவர்கள் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள், இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது. தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மாறி இன்று தெருக்களும் வெறிச்சோடி கிடைக்கிறது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்...

1. பல்லாங்குழி
      பெரும்பாலும் வயது வந்த பெண்கள் தங்களது தோழிகளுடன் வீட்டினுள் அமர்ந்து பல்லாங்குழி ஆடுவது வழக்கம். வட்டமாக குழி உள்ள பலகையில் புளியாங்கோட்டை அல்லது சோழி அல்லது முத்துகளை சேர்த்து ஆடுவார்கள். கடைசி மணி தீரும் வரை ஆட்டம் நீடிக்கும். இதனால் விரலுக்கு பயிற்சியும் கணக்கு பயிற்சியும் பெற முடியும் என நம்பினர்.
   இன்றைய காலத்தில் சதுரங்க பலகையே நம்மது பலரின் வீட்டில் இல்லாத நிலையில் பல்லாங்குழி பலகை எங்கே இருக்கும்.

2.கோலி
       விடுமுறை நாட்களில் சிறுவர்கள் தெருவில் பளிங்கு போன்ற கோலிக்குண்டுகளை வைத்து விளையாடுவார்கள். ஒரு போட்டியாளரின் கோலியை மற்றொருவர் தனது கோலியை கொண்டு அடிக்க வேண்டும். இலக்கை நோக்கி சரியாக அடித்துவிட்டால் வெற்றிபெற்றவர் தோற்றவர் கோலிக்குண்டுகளை எடுத்துச் செல்லலாம்.
   இது அன்றைய சிறுவர்களுக்கிடைய மிக பிரபலமான விளையாட்டாகும். இதே கோலிக்குண்டுகளை கொண்டு மற்றொரு பலகை விளையாட்டும் உண்டு.

3. பம்பரம்
      தெருக்களில் மட்டுமல்ல அன்றைய படங்களில் கூட பம்பர விளையாட்டு காட்சிகள் அதிகமாக இடம்பெறும். பம்பரக்கட்டை மற்றும் சாட்டையை கொண்டு இந்த விளையாட்டை துவங்க வேண்டும். இருவர் அல்லது பலர் இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம். முதலில் கீழே ஓர் வட்டத்தை இட வேண்டும், பின் சிறுவர்கள் பம்பரத்தை சுழற்றி ஒரே நேரத்தில் கீழே விட்டு சுழற்றி விட வேண்டும். அதன் பின் சுழன்றுகொண்டு இருக்கும் பம்பரத்தை கையில் எடுத்து வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை அடித்து வெளியில் எடுக்க வேண்டும்.
      சில சமயங்களில் பம்பரம் உடைந்துவிடும், அதனால் சிறுவர்கள் பம்பரங்களை நேர்த்தியாக தேர்வு செய்வார்கள். சிலருக்கு இது பொக்கிஷம் போன்றது. தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படும்.

_ விளையாடலாம்...

Pages