மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 26 April 2019

🐒புத்திசாலி குரங்கு 🐵🦁

THE ABODE OF GOD.!

       One day, an old lion felt hungry. Being unable to hunt, it thought of a plan and started limping. A monkey sitting on that tree saw him and asked, ′Why are you limping?′.

    At this the lion replied, ′I have committed many sins in my life. Now I am old and want to repent for them. By walking carefully, I′m not going to kill ants on the way′.

      The monkey came down from the tree to meet the noble lion. When the monkey descended from the tree, the lion caught it. But the monkey was very clever. It suddenly started laughing. 

    When the lion asked the reason for laughing, the monkey said, ′One who will laugh at this moment will go to the abode of god′. The lion also started laughing.

     The monkey got an opportunity and immediately climbed the tree. The lion repented for his foolishness.

      ஒரு நாள், ஒரு வயதான சிங்கம் பசியாக உணர்ந்தது. வேட்டையாட முடியாததால், அது ஒரு திட்டத்தை தீட்டி, நொண்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தது. மரத்தில் அமர்ந்து இருந்த குரங்கு அதைப் பார்த்து, 'நீ ஏன் நொண்டிக்கொண்டு நடக்கிறாய்?" என்று கேட்டது.

     அதற்கு சிங்கம், 'என் வாழ்க்கையில் நான் பல பாவங்களைச் செய்திருக்கிறேன். இப்போது எனக்கு வயதாகி விட்டது, அவற்றிற்காக மனம்வருந்த விரும்புகிறேன். நான் கவனமாக நடந்து செல்வதன் மூலம், வழியில் உள்ள எறும்புகளை கொல்லாமல் செல்கிறேன்" என்று கூறியது. 

   அந்த உயரிய குணமுடைய சிங்கத்தை சந்திக்க குரங்கு மரத்திலிருந்து இறங்கியது. குரங்கு மரத்தில் இருந்து இறங்கியதும் சிங்கம் அதனை பிடித்துக் கொண்டது. ஆனால் குரங்கு மிகவும் புத்திசாலி. அது திடீரென்று சிரிக்க ஆரம்பித்தது.

    சிங்கம் சிரித்தற்கான காரணத்தைக் கேட்ட போது, அதற்கு குரங்கு, 'இந்த நேரத்தில் சிரிப்பவர்கள் கடவுளின் வீட்டிற்கு செல்வார்கள்" என்று கூறியது. சிங்கமும் சிரிக்க ஆரம்பித்தது.

    குரங்குக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, உடனடியாக அந்த மரத்தில் ஏறியது. சிங்கம் அதனுடைய முட்டாள்தனத்திற்காக மனம்வருந்தியது.

Pages