மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 3 April 2019

நடத்தை எப்பொழுதும் கணக்கிடப்படுகிறது.

As You Sow, So Shall You Reap..!!

    Once upon a time, a flea saw an ox grazing in a pasture. He knew that oxen work for men in their farms. But he didn′t like it. He was proud that he fed on men′s blood and yet didn′t do anything for them.

   Approaching the ox, the flea asked, ′How is it so that you work for men though you are quite big and strong? Look at me, I never do anything for them and yet feed on their blood though I am so small′.

    The ox was surprised to hear what the flea had said and replied, ′If I work for men, they are very kind to me′. They take care of mine in every way, feed me, shelter me and moreover, pat me on my back, head and neck out of love and affection. 

   On the other hand, you suck their blood and they are always think to destroy you. Now the flea understood the difference between them.

Moral : Behavior is always counted.

    ஒருமுறை ஒரு உண்ணிப் பூச்சி ஒன்று, புல்தரையில் எருது மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தது. எருது மனிதர்களுக்காக பண்ணையில் வேலை செய்கின்றது என்று உண்ணிப் பூச்சிகளுக்கு தெரியும். ஆனால் விவசாயிகளுக்கு எருதுகள் உதவுவது உண்ணிப் பூச்சிகளுக்கு பிடிக்கவில்லை. உண்ணிப் பூச்சிகள் மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சிகொண்டு, அவர்களுக்கு எந்த வித உதவியும் செய்வதில்லை என்பதை நினைத்து மிகவும் பெருமிதம் கொண்டது.

   எருதை அணுகிய உண்ணிப் பூச்சிகள், 'நீ மிகவும் வலிமையுடையவனாக இருப்பினும் கூட, எதற்காக மனிதர்களுக்கு வேலை செய்கிறீர்கள்? என்னை பார், நான் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை மற்றும் நான் சிறியவானாக இருந்த போதிலும் அவர்களுடைய இரத்தத்தை உறிஞ்சுகிறேன்" என்றது.

   எருது மிகவும் ஆச்சரியப்பட்டு, 'மனிதர்களுகாக நான் வேலை செய்தால், அவர்கள் என் மீது மிகவும் அன்பாக இருக்கிறார்கள், அவர்கள் ஒவ்வொரு வழியிலும் என்னை கவனித்துக்கொள்கிறார்கள், எனக்கு உணவளிக்கிறார்கள், தங்குவதற்கு இடம் கொடுக்கிறார்கள், அன்போடும் பாசத்தோடும் என்னை தட்டிக் கொடுக்கிறார்கள்" என்று உண்ணிப்பூச்சியிடம் கூறியது. 

    மறுபுறம், நீ அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிகிறாய், அவர்கள் உன்னை அழிக்கத் தான் எப்போதும் நினைக்கிறார்கள். இப்போது உண்ணிப்பூச்சி, அவர்களுக்குள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டது.

நீதி : நடத்தை எப்பொழுதும் கணக்கிடப்படுகிறது.

Pages