மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 23 April 2019

உலகின் மிகப்பெரிய பிரம்மிப்பான இடம் !!


        இந்த உலகின் இயற்கை அழகை காண கண்கோடி வேண்டும். இந்தமாதிரி அழகான ரம்யமான இடங்கள் எங்கிருந்தாலும் அதை தேடி கண்டுபிடித்து அங்கு சென்று இயற்கை அழகை ரசிக்கக்கூடியவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஏற்ற இடம்தான் இது.

       உலகின் மிகப்பெரிய பிரம்மிப்பான இடம் தான் தி கேட் டூ ஹேவன். இது சீனாவில் அமைந்துள்ள ஒரு இயற்கை அழகு மிகுந்த மலைப்பகுதி. இது மிகவும் ஆபத்துகள் நிறந்த பகுதியும் கூட.

      இந்த தி கேட் டூ ஹேவன் மலைப்பகுதியை அடைய கிட்டத்தட்ட 99 கொண்டை ஊசி வளைவுள்ள சாலையை கடந்தால் தான் அதன் கீழ் பகுதியை சென்றடைய முடியும். மேலும், இந்த தி கேட் டூ ஹேவன் அழகை ரசிக்க அங்கிருந்து 999 படிகட்டுகள் ஏற வேண்டும்.

      நிறைய ஆபத்துகள் நிறைந்த சாலைகள் மற்றும் 999 படிக்கட்டுகளை கடந்து சென்று பார்க்க பெரிய கட்டிடக்கலையோ, கோவிலோ அல்லது வரலாற்று சிறப்புமிக்க இடமோ கிடையாது.

   அங்குள்ள குகை போன்ற அமைப்புடைய அந்த இடத்தில் நின்று சுற்றியுள்ள இயற்கை அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது. அந்தளவுக்கு அந்த இடமானது மிகவும் அழகாவும், அமைதியாகவும் இருக்கும்.

   இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் காலை சூரிய உதயத்தின் போதும், மாலை பனி மூட்டம் ஆரம்பமாகும் போதும் அந்த குகை போன்ற துளை வழியாக வரக்கூடிய சூரிய வெளிச்சத்தையும் மற்றும் பனிமூட்டத்தையும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

     இதன் காரணமாக தான் இந்த இடத்திற்கு தி கேட் டூ ஹேவன் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

     உண்மையிலேயே அதிகமாக திரில் உள்ள பகுதிக்கு மலையேற்றத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கு சென்று வரலாம்.

Pages