மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 22 April 2019

பூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு


    விண்வெளிக்கு நாசா அனுப்பிய ‘டெஸ்’ செயற்கைக்கோள், முதல் முறையாக பூமியை போன்று அதே அளவிலான புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. 


      அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, புதிய கிரகங்களை கண்டறிந்து ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்தாண்டு ‘டெஸ்’ என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. இது வெற்றிகரமாக செயல்பட்டு புதிய கிரகங்களை கண்டு பிடித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்தது. இது பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது இதற்கு, ‘எச்டி 21749 பி’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘இந்த கிரகம் மிகவும் குளிர்ச்சியானது. உயிரினங்கள் வாழ தகுதியானது’ என சொல்லப்பட்டது 

   இந்நிலையில், இந்த செயற்கைக்கோள் மற்றொரு கிரகத்தை கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. ‘எச்டி 21749 சி’ என்று அழைக்கப்படும் இந்த கிரகம் பூமியை போல், அதே அளவில் இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. முதல் முறையாக பூமியின் அளவில் கிரகம் தென்பட்டுள்ளது விஞ்ஞான உலகில் பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது கடந்த மார்ச்சில் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள், பூமியை விட 20 சதவீதம் பெரியதான ‘கே2-229 பி’ என்ற கிரகத்தை கண்டுபிடித்தனர். 

     தொடர்ந்து, புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் விண்வெளி குறித்து அறியப் படாத பல்வேறு தகவல்களும், இந்த ஆராய்ச்சியில் விரைவில் வெளியாகலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Pages