மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 20 April 2019

கோவிலுக்குள் கல்லாகும் மனிதர்கள் !!


   ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது ஆயிரம் வருடங்கள் பழமையான கிரடு என்னும் மர்மங்கள் நிறைந்த கோவில்.

   பழமைக்கும், கட்டிடத்திற்கும் பெயர்பெற்ற இக்கோவில் தற்போது பயத்திற்கும், அமானுஷ்யத்திற்கும் புகழ்பெற்று விளங்குகிறது.

    ஆனால், இந்த கோவிலிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மாலை 6 மணி ஆனாலே பதறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

    காடுகள் நிறைந்த பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலிற்கு மாலை நேரங்களில் வரும் பக்தர்கள் தப்பி தவறி கூட 6 மணிக்குமேல் இங்கு தங்குவதில்லை. ஏன் தெரியுமா?

     இரவு நேரங்களில் இக்கோவிலில் தங்குபவர்கள் தூங்கிவிட்டால் அவர்கள் கல்லாக மாறிவிடுவார்கள் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

     எனவே அப்பகுதி மக்கள் புதியதாக கோவிலுக்கு வருபவர்களிடம் இரவு நேரங்களில் கோவிலில் தங்கக்கூடாது என்று எச்சரிக்கின்றனர்.

      சிலர், பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊருக்கு வந்த முனிவர் ஒருவருக்கு இங்கு வாழும் மக்களை பிடிக்காததால் அனைவரையும் கல்லாக மாற்றி விட்டதாக கூறுகின்றனர்.

    இன்றும் அந்த முனிவர் அந்த கோவிலில்தான் இருக்கிறார் என்கின்றனர் வேறு சிலர்.

     இந்த கோவிலில் உள்ள சுவர்கள், தூண்கள் என எல்லாவற்றிலும் மனித உருவங்களைக் கொண்ட சிலைகள் உள்ளன.


      சிலைகள் பார்ப்பதற்கு மனிதனாக இருந்து கல்லாக உருமாறியதாகவே தோற்றம் அளிக்கிறது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

Pages