மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 28 April 2019

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா?

A Farmer and his Daughter..!

      A Father and his only little daughter lived together. He loved her daughter very much and he lived his life only for her. One day his daughter became ill and the man treated her daughter with best doctors, but there is no improvement in her health.

     All the efforts of father failed and daughter died. After her death, father became recluse and shut himself away from everyone refusing every activity that might help him to bring him back to his normal self.

       One night he had a dream. In dream he was in heaven and he noticed all little children were dressed like angels. He saw that all white robed angel girls carried a lighted white candle with them. After a while he noticed that a little girl′s candle was not lightened. Then he noticed the girl with dark candle was his own little girl. He rushed toward her and seized her in his arms.

       He asked her, ′My angel, Why was your candle is not lightened?′ She replied, ′Father, Your tears have turned my candle off.′ Just after this man woke from his dream and came to knew that what he should do. From that day onwards he meet his friends freely and cheerfully. Now he realized that the child′s candle quenched.

Moral : 
      Even if we lose someone, Life goes on. We should not hurt gone soul by living a sad and alone life.

      ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார். ஒரு நாள் அவர் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, அவர் தன் மகளுக்கு சிறந்த மருத்துவரை கொண்டு சிகிச்சை அளித்தார். ஆனால் அவள் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. 

   தந்தையின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன, அவருடைய மகள் இறந்துவிட்டாள். அவளது மரணத்திற்குப் பிறகு, அவளுடைய அப்பா முற்றிலும் துறவு வாழ்க்கை மேற்கொண்டு, அனைவரையும் விட்டு விலகிச்சென்றார்.

     ஒரு நாள் இரவு அவர் ஒரு கனவு கண்டார். அந்த கனவில் அவர் சொர்க்கத்தில் இருப்பது போலவும், அங்குள்ள அனைத்து குழந்தைகளும் தேவதைகள் போல உடை அணிந்திருப்பதை கவனித்தார். வெள்ளை உடை அணிந்த குழந்தை தேவதைகள், வெள்ளை மெழுகுவர்த்தியை எடுத்து வருவதை பார்த்தார். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் ஒரு குழந்தையின் மெழுகுவர்த்தி எரியாததைப் பார்த்தார். பின்னர் அந்த இருண்ட மெழுகுவர்த்தியை ஏந்திக் கொண்டு வந்த பெண் தன் குழந்தை தான் என்பதை கண்டு கொண்டார். அவர் அந்த குழந்தையை நோக்கி வேகமாக சென்று, அவளை கைகளால் பற்றி கொண்டான்.

     அவர் அந்த குழந்தையிடம், 'என் தேவதையே, உன் மெழுகுவர்த்தி மட்டும் ஏன் எரியவில்லை?" என்று கேட்க, அந்த குழந்தையோ 'அப்பா, உங்கள் கண்ணீர் என் மெழுகுவர்த்தியை அணைத்து விட்டது" என்று பதிலளித்தாள். திடீரென்று தந்தை கனவில் இருந்து விழித்து, அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார். அந்த நாளில் இருந்து அவர் துறவு வாழ்க்கையை விடுத்து, அவரது நண்பர்கள் அனைவரையும் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் சந்தித்தார். இதன்மூலம் தன் குழந்தையின் மெழுகுவர்த்தி அணையாது என்பதை உணர்ந்தார்.

நீதி : 
     நாம் யாரையாவது இழந்து விட்டால், வாழ்க்கை அவ்வளவுதான் என எண்ணி விடக் கூடாது, இன்னும் வாழ்க்கை இருக்கிறது. சோகமான வாழ்க்கை வாழ்வதன் மூலம் இறந்தவரை நாம் காயப்படுத்தக் கூடாது

Pages