மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 19 April 2019

வாகனங்களை கவர்ந்திழுக்கும் மலை... காஷ்மீரின் காந்த மலை🌹🌹

காந்த மலை!!

   மனிதனின் மூளைக்கும், அறிவியலுக்கும் அப்பாற்பட்ட இயற்கை விநோதங்கள் உலகம் முழுவதும் பரவி கிடக்கின்றன.


   அவ்வாறான அதிசயங்களில் ஒன்றுதான் காஷ்மீரின் காந்த மலை. அப்படி அங்கே என்ன மர்மம் இருக்கிறது? என்பதை பார்க்கலாம் வாங்க...

   நீண்ட தூர வாகன ஓட்டிகளின் சொர்க்கமாக திகழும் லடாக்கில் இருக்கும் ஓர் இயற்கை அதிசயம் தான் காந்த மலை.

   இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் லே என்னுமிடத்திலிருந்து லடாக்கு செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் காந்தமலை அமைந்துள்ளது.

    இவ்வழியாக செல்லும் வாகனங்கள் இம்மலை இருக்கும் திசை நோக்கி ஈர்க்கிறது என நம்பப்படுகிறது. ஆகவே, இம்மலை காந்தமலை என அழைக்கப்படுகிறது.

    காந்த மலைக்கு அருகேயுள்ள சாலையில் போடப்பட்டிருக்கும் குறிப்பிட்ட கட்டத்திற்குள் கார் அல்லது இதர வாகனங்களை எஞ்சினை ஆஃப் செய்து, நியூட்ரல் கியரில் நிறுத்தும்போது, அது தானாகவே காந்த மலை பக்கம் நகர்கிறது.

    மலைப்பகுதிகளில் வாகனங்கள் தாழ்வான பகுதிகளை நோக்கி நகர்ந்து செல்லும். ஆனால் இம்மலையில் எதிர்மறையாக நடக்கிறது.

    மேடான பகுதியில் 10 கி.மீ முதல் 20 கி.மீ வரை வாகனத்தின் எடைக்கு ஏற்றவாறு தானாக காந்தமலை இருக்கும் திசைநோக்கி வாகனங்கள் பயணிப்பது அதிசயமாக உள்ளது.

  இந்த மலை பறக்கும் விமானங்களை கூட தன் பக்கம் கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டதாக கூறப்படுகிறது.

புரியாத மர்மம் :

      இம்மலையிலுள்ள அதிகப்படியான புவிஈர்ப்பு சக்தி தான் வாகனங்களை கவர்ந்திழுக்கிறது என்று ஒரு தரப்பு அறிவியலாளர்களும், இது ஒளியியல் கண் மாயம் என்று மற்றொரு தரப்பு அறிவியலாளர்களும் தெரிவிக்கின்றனர்.

    இருப்பினும் இதற்கான உண்மை இன்றும் கண்டறியப்படவில்லை.

       புரியாத புதிராக உள்ள இந்த காந்த மலைக்கு ஒவ்வொரு வருடமும் உலகில் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மோட்டார் வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.

Pages