மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 10 April 2019

வேடந்தாங்கல் என்பதன் பொருள் தெரியுமா?

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 

       தமிழகத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், நாட்டின் பழமையான சரணாலயங்களில் ஒன்று. இது 1858ல் உருவாக்கப்பட்டது. வேடந்தாங்கலுக்குத் தமிழ் மொழியில் 'வேட்டைக்காரரின் குக்கிராமம்" என பொருள். இது காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுக்காவில் உள்ளது. 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 40 ஆயிரம் பறவைகள் வாழ்கின்றன. ஆண்டுதோறும் குளிர்காலங்களில் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பறவைகள் வலசை வருகின்றன.

தகவல் களஞ்சியம்...!

 லண்டனிலுள்ள உலோகச் சந்தையில்தான் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

 ஒலி, டெஸிபல் அளவுகோல் மூலம் கணக்கிடப்படுகிறது.

 உலகிலேயே மேற்கிந்திய தீவு நாட்டின் பல்கலைக்கழகம் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டிற்கு எம்.எஸ்.சி. பட்டம் வழங்குகிறது. 

 சர்வதேச அளவில் தங்கம் அவுன்ஸ் அளவில்தான் விற்பனையாகிறது.

 கூகர் புர்தா பறவை மனித குரல்களை அப்படியே திருப்பிச் சொல்லும் ஆற்றல் கொண்டது.

 வடதுருவத்தில் நமது தேசியக் கொடியை ஏற்றிய முதல் பெண்மணி பிரீத்திசென் குப்தா.

 வயது முதிந்தவர்களுக்கு முதன் முதலில் பென்சன் திட்டம் ஜெர்மனியில் அறிமுகமானது.

 ஆகாயத்தை தொடும் நகரம் என அழைக்கப்படுவது நியூயார்க்.

 எவரெஸ்ட் சிகரம் ஆண்டு தோறும் 4 செ.மீ. வளர்கிறது.

Pages