மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 20 April 2019

உலகிலேயே உயரமான மரம்..!🌳🌳🌳


🌳 379.1 அடி உயரத்துடன் உலகிலேயே மிகப் பெரிய மரமாக இருக்கிறது ஹைபெரியன். இதுவரை மிக உயரமான மரமாக இருந்த கலிபோர்னியா ஸ்ட்ராடோஸ்பியர் ஜெயண்ட் செம்மரத்தின் உயரம் 369 அடிகள். கிறிஸ் அட்கின்ஸ், மைக்கேல் டெய்லர் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் கலிபோர்னியாவில் உள்ள செம்மர தேசியப் பூங்காவில் மரங்களை ஆய்வு செய்தபோது தான் இதுவரை உயரமாக இருந்த ஸ்ட்ராடோஸ்பியர் ஜெயண்ட் மரத்தை விட ஹைபெரியன் உயரமாக இருந்ததைக் கண்டறிந்தனர். 

🌳 இது சான் பிரான் சிஸ்கோ நகரில் இருக்கும் பெர்ரி (315 அடி) கட்டிடத்தை விடவும் மிக உயரமானதாகும். சூழலியலாளர் ஸ்டீவ் சில்லெட் ஹைபெரியனை அளந்து பார்த்தார். ஆனால் துல்லியமாக அளக்க முடியவில்லை. தற்போது மிக நவீனமான கருவிகளுடன் மரத்தின் உயரத்தை அளக்க முடிந்திருக்கிறது. அத்துடன் ஹைபெரியன் பற்றிய ஆவணப்படமும் எடுக்கப்பட்டு இருக்கிறது. 

🌳 ஹைபெரியன் உயரம் 25 மாடி உயரத்துக்கு இருக்கிறதாம்! அதனால் ஹைபெரியனை அளப்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது. அட்கின்ஸ், டெய்லரின் கண்டுபிடிப்பு உண்மை என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

🌳 அத்துடன் உலகிலேயே மிக உயரமான மரம் ஹைபெரியன் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் இளமையோடு வேகமாக வளர்ந்து வரும் ஹைபெரியனுக்கு வயது 600. இன்னும் 600 ஆண்டுகள் கூட வாழ முடியும். ஹைபெரியனைப் பாதுகாப்பதற்காக, அது எங்கே இருக்கிறது என்பதை இதுவரை துல்லியமாகச் சொல்லவில்லை. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து, மரத்தில் ஏறினால் மரம் பாதிப்படையும் என்பதால் இந்த ரகசியத்தைப் பாதுகாக்கிறார்கள்.

Pages