மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 6 April 2019

வரலாற்றில் இன்று - சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம் !

சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்

🏆 விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையை ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

🏆 விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். இது வளர்ச்சி, அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ள+ர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது. 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

✍ மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திருச்சியில் பிறந்தார்.

✍ இவர் சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து, பல இலக்கியங்களைப் படைக்க தொடங்கினார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் பிள்ளைத்தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார்.

✍ இவர் ஏராளமான தல புராணங்களை பாடியுள்ளார். இவரிடம் பயின்றவர்களில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள்.

✍ மாயூரம் வேத நாயகம் பிள்ளையை பாராட்டி குளத்துக்கோவை என்னும் நூலை இயற்றினார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு மகாவித்வான் என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.

✍ 19ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தனது 60வது வயதில் (1876) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

🌱 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை ஆர்வலர் கோ. நம்மாழ்வார் பிறந்தார். 

🏆 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்டது. 

🏀 1896ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி 1500 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதன்முறையாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமாயின.

👉 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பல கல்விச்சாலைகளை நிறுவிய டாக்டர் அழகப்ப செட்டியார், சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் பிறந்தார்.

Pages