இயற்கை நமக்கு தந்திருக்கும் அழகிய சூழலில் நாம் அறிந்த, அறியாத பல அதிசயங்கள் உள்ளன.
அந்த அதிசயங்களில் ஒன்றுதான் மிளிரும் கடற்கரை... அது என்ன மிளிரும் கடற்கரை என்ற கேள்வி அனைவருக்குள்ளும் தோன்றுகிறதா?...
கடல் என்றாலே அலைகள், மணல்கள் நிறைந்த இடம் என்று நமக்கு தெரியும்... அனைத்து கடற்கரையைப் போல அல்லாமல் சிறு வித்தியாசம் நிறைந்த கடற்கரையைப் பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
எங்கு அமைந்துள்ளது?
எங்கு அமைந்துள்ளது?
மாலத்தீவில் அமைந்துள்ள வைதூ தீவு கடற்கரை தண்ணீர் மிளிரும் தன்மையை கொண்டுள்ள அழகிய கடற்கரை.
இந்த கடற்கரையில் உள்ள தண்ணீரை தொடும்போதோ அல்லது தண்ணீரில் ஏற்படும் அசைவிலோ அதாவது, அலைகள் வந்தாலுமே அந்நீரில் பிரகாசமான ஒரு ஒளி ஏற்படுகிறது.
இந்த பிரம்மிப்பான காட்சிக்கு காரணம் என்னவென்றால் இந்த கடற்கரையில் வாழும் பல்லாயிரக்கணக்கான ostracods எனப்படும் உயிரினங்கள்தான். இவை மின்மினி பூச்சிகள் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த மின்மினி பூச்சிகளில் இருக்கும் blolumlnescence போன்ற இராசயனங்களை இந்த ostracods என்ற உயிரினங்களும் கொண்டிருக்கின்றன.
நம் கண்களுக்குத் தெரியாத அளவில் காணப்படும் மிக நுண்ணிய உயிரினங்கள் இறக்கும் போதுதான் அதிலுள்ள ரசாயனங்கள் வெளியே வரும்போது கடல் நீர் ஒளிர்கின்றன.
இந்த உயிரினங்களை தொடும்போதோ அல்லது சிறிது அசைவு ஏற்பட்டால் கூட இறந்து போகும் தன்மையை கொண்டுள்ளது.
மேலும், இந்த தண்ணீரை தொடும்போது ஆயிரக்கணக்கான உயிரினங்கள் இறந்து அழகான ஒளியை ஏற்படுத்துகின்றன.
தினமும் பல உயிரினங்கள் பிறந்து மறுபடியும் அங்கு ஏற்படும் அசைவினால் இறந்து விடுகின்றன.
மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் இவ்வுலகில் இதுவும் ஒரு ஆச்சரியமாகத் தான் கருதப்படுகிறது.
🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹