ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மக்கள் பெரும்பாலும் மிதிவண்டியைப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நாடுகளைவிட சீனாவில் தான் அதிக எண்ணிக்கையில் மிதிவண்டிகள் பயன்பாட்டில் உள்ளன. சீனாவை அடுத்து பிரான்ஸ் நாட்டில் அதிக எண்ணிக்கையில் மிதிவண்டிகள் உள்ளன.
உலகம் முழுவதும் ஆண்டுகளுக்குச் சுமார் 10 கோடி மிதிவண்டிகள் தயாரிக்கப்படுகிறது.
உலக அளவில் சுமார் 6 மைல் தூரத்தை மிதிவண்டியிலேயே பயணம் செய்து கழிக்கிறார்கள் மக்கள். அவர்களில் பெரும்பாலானோர் சீனா, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.
டச்சு மக்கள் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 100 கோடி யூரோக்களை மிதிவண்டியை வாங்குவதற்காகவே செலவிடுகின்றனர்.
நெதர்லாந்தின் தலைநகரமான ஆம்ஸ்டெர்டாம், உலகிலேயே மிதிவண்டியை அதிகமாக பயன்படுத்துகிறது. சுமார் 400 கிலோ மீட்டர் நீளத்துக்கு மிதிவண்டி ஓட்டும் பாதைகள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் மிதிவண்டி உற்பத்தியானது சுமார் 13 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் மிதிவண்டி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு சீனத் தயாரிப்பாக உள்ளது.