மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 12 April 2019

சத்துக்கள் வழியும் சர்க்கரை வள்ளி கிழங்கு


       இதனை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இது சத்துக்களின் கூடாரம் . அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன.

     விட்டமின் ஏ, பி, சி, இரும்பு, பொட்டாசியம், ஆகியவை உள்ளன. இவை நல்ல உடன் நலத்தையும், சருமம், எலும்பு உருவாவதற்கும் தேவையான சத்துக்களை அளிக்கிறது.

    பொதுவாக எல்லா வகை கிழங்குகளில் கொழுப்பு அதிகம் இருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு இல்லை. அதிக நார்சத்து உள்ளது. எனவே ஒன்று சாப்பிட்டாலும் வயிறு நிறையும்.

     உடல் உள்ளுறுப்புகளில் பாதிப்பு மற்றும் வீக்கங்கள் உண்டானால் அவற்றை சரிப்படுத்தும். விட்டமின் பி,சி மற்றும் நார்ச்சத்து ஆகியவைகளை கொண்டது. அதிக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை.

   கர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதிலுள்ள ஃபோலேட் கருவளர்ச்சிக்கு உதவும்.

    இந்த கிழங்கை வேக வைத்தோ சுட வைத்தோ அல்லது சிப்ஸ் போலவோஅ எப்படி சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் முழுதும் கிடைக்கும் என்கிறார்கள்.

    நுரையீரல் காற்றுப் பையில் எழும் பிரச்சனையின் காரணமாக வரும் நோய்தான் எம்ஃபைசீமா என்பது.

    இந்த நோயினால் சிறிது சிறிதாக ஆரம்பித்து மூச்சு விடுவதில் பிரச்சனை உண்டாகும். இதற்கு தினமும் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும்.

   சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அனைத்து விட்டமின்களும், மினரல்களும் வயிற்ற்ல் உண்டாகும் அல்சரை குணப்படுத்துகிறது.

Pages