மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 28 April 2019

குட்டி இங்கிலாந்து நம்ம ஊரில்..!! குட்டி இங்கிலாந்து... தளி...!!!



   குளிர்ச்சிக்கு குறைவில்லா இடமான தளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலைகளால் சூழப்பட்டுள்ள அழகிய இடம்.

சிறப்புகள் : 

   தளியைச் சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாக இருப்பதால் குட்டி இங்கிலாந்து என பெயர் பெற்றது.

    தட்பவெட்பநிலை ஆண்டு முழுவதும் மிகவும் குளிர்ச்சியாக உள்ளதால் அக்காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் இப்பகுதியினை லிட்டில் இங்கிலாந்து என்று அழைத்தனர்.

   அமைதியான, அழகிய சோலையைப் போன்ற தளி கிராமம் 'லிட்டில் இங்கிலாந்து" என்ற பெயரைப் பெருமையுடன் பெற்றிருக்கும் சுற்றுலாத்தலமாகும். இந்த கிராமம் முழுவதும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. 

    இப்பகுதியில் உள்ள குளிர்ச்சியான தட்பவெட்பநிலை விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதால் மலர்கள், காய்கறிகள், கனிகள் பெருமளவில் இங்கு விளைகிறது. 

     மேலும் இவ்விடத்திற்கு ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களூரில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

    எண்ணற்ற ஏரிகள், சிறு மலைக்குன்றுகள் மற்றும் மகிழ்ச்சியை உறுதியளிக்கும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை யுடைய தளி ஒவ்வொருவருக்கும் ஒருவித உணர்வைத் தரும் சுற்றுலாத்தலமாகும். 

    ஒசூரில் இருந்து 25கிமீ தொலைவில் உள்ள தளி கிராமத்திற்கு தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலிருந்தும், கேரளா விலிருந்தும் வர முடியும். 

    மலையேற்றம் மற்றும் மலை ஏறுதல் ஆகியவற்றிற்கு ஏற்ற நிலப்பகுதிகளை கொண்டுள்ள இடமாக தளி புகழ் பெற்றிருக்கிறது.

Pages