மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 19 April 2019

🍦🍦🍦ஐஸ்கிரீம் தோன்றியது எப்படி? சுவையான நிகழ்ச்சி🍧🍧🍧


     கோடை காலம் வந்துவிட்டால் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் கூட ஐஸ்கிரீமை நாடி ஓடுகிறார்கள். ஐஸ்கிரீம் தோன்றிய விதம் நம்மில் பலருக்குத் தெரியாது. அதற்கு ஒரு சுவையான கதை உண்டு.

   ஷெட்டி ஜான்சன் என்ற பெண் இதைத் தயாரித்தாள். ஆனால், விருப்பப்பட்டுத் தயாரிக்கவில்லை. ஏதோ தவறின் காரணமாக ஐஸ்கிரீம் தயாராயிற்று. அதற்காக அவள் குற்றவாளியாகி சிறையில் அடைக்கப்பட்டாள். இது 200 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த உண்மை நிகழ்ச்சி!

   அப்போது ஜேம்ஸ் மேடிசன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். இப்போது போலவே அப்போதும் ஜனாதிபதி பெரிய பெரிய விருந்துகள் கொடுப்பது வழக்கம். வழக்கப்படி ஒரு நாள் வெள்ளை மாளிகையில் பெரிய விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. ஜனாதிபதியின் மனைவியான டாலி மேடிசன் மேற்பார்வையில் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், என்ன காரணத்தினாலோ விருந்து தடைபட்டது எல்லோருக்கும் ஏமாற்றம். விருந்துக்குப் பட்டப்பாடெல்லாம் வீணாயிற்று.

    வெள்ளைமாளிகையில் சமையல் செய்பவள் ஒரு நீக்ரோ பெண்மணி. அவள் பெயர்தான் ஷெட்டி ஜான்சன் அவள் தயாரித்த பண்டங்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவற்றை எல்லாம் ஐஸ்பெட்டியில் வைத்திருந்தாள்.

    ஆனால், சில நாட்களுக்குள்ளேயே மீண்டும் விருந்துக்கு ஏற்பாடாயிற்று. பெட்டிகளில் இருந்த தின்பண்டங்களைப் பற்றிய விஷயம் அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. திறந்து பார்த்தபோது தின்பண்டங்கள் இறுகிப் போயிருந்தன. அப்படி இறுகியவற்றை விருந்தினர்களுக்கு எப்படிப் பரிமாறுவது என்று சற்றுத் தயங்கினாலும் கடைசியில் அவற்றையே பரிமாறினாள். விருந்தினர்கள் அவற்றைப் பார்த்து, சற்று தயங்கினர். அவை, அவர்களுக்குப் புதுமையாகத் தோன்றின. ஒருவர் மட்டும் ஒரு தின்பண்டத்தை வாயில் போட்டுக் கொண்டார். அது பனிக்கட்டி போல் குளிர்ந்து, பற்களைக் கூச வைத்தது. உடனே அவர் பயந்து போய் ருசியைக் கூட கவனிக்காமல், 'ஐயோ, விஷம்; விஷம்!" என்று கத்தினார். கூட்டத்தில் ஒரே குழப்பம்! ஷெட்டியைப் பிடித்து சிறையில் அடைத்தார்கள். வந்திருந்தவர்கள் யாரும் ஒரு பொருளையும் தொடாமல் எழுந்து போய்விட்டார்கள்.

    மிக மகிழ்ச்சியாக ஆரம்பித்த விருந்து துயரத்தில் முடிந்ததைக் கண்ட ஜனாதிபதியின் மனைவி, மிக வருந்தினாள். விஷம் எப்படி வந்திருக்கும் என்று அவளுக்குப் புரியவில்லை. உண்மையை அறிய எண்ணினாள். சோதித்துப் பார்க்க எண்ணி, ஒரு தின்பண்டத்திலிருந்து ஒரு துண்டை எடுத்து, வாயில் போட்டுக் கொண்டாள். என்ன ஆச்சரியம்! அந்தத் துண்டின் இனிப்பு அதி அற்புதமாக இருந்தது. அவ்வளவு சுவையான பண்டத்தை அது நாள்வரை அவள் சுவைத்ததே இல்லை. மேலும் கொஞ்சம் சாப்பிட்டாள், அப்படியே முழுவதும் சாப்பிட்டு விட்டாள். உறைந்த தின்பண்டங்களுக்குப் பழக்கப்படாத விருந்தினர்கள் பயந்து விட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டாள்.

   உடனடியாக, ஷெட்டியை சிறையிலிருந்து மீட்டாள். அன்று தொடங்கி ஓராண்டுக்குள் ஐஸ்கிரீம் அமெரிக்கா முழுவதும் பரவி, பின்னர் உலகம் முழுவதும் பரவியது.

Pages