மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 4 April 2019

நீண்ட காலம் தூங்கும் நத்தை..!


 நத்தை, முதுகெலும்பற்ற ஓர் உயிரினமாகும். நிலம், நன்னீர் நிலைகள் மற்றும் கடலில் இவை வாழ்கின்றன. ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நத்தை இனங்கள் பூமியில் வாழ்கின்றன.

 ஈரப்பதம் கொண்ட உடலின் மூலம் மிகக்கடினமான இடங்களிலும் எளிதில் செல்லும் திறன் கொண்டது. ஆபத்துக்காலங்களில் உடலினை, முதுகில் இருக்கும் ஓட்டினுள் இழுத்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ளும் திறன் கொண்டவை. சில நத்தையினங்கள் நீண்டகாலம் தூங்கும் ஆற்றல் கொண்டது. கோடை காலங்களில் வெப்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள இவை நீண்ட காலம் தூங்குகின்றன.


 உலகிலேயே மிகவும் மெதுவாக செல்லக்கூடிய வகையில் படைக்கப்பட்டுள்ள நத்தைகள், சராசரியாக வினாடிக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்து செல்லும். இந்த இனங்களில், இரு பாலினமும் இனப்பெருக்க உறுப்புகளை கொண்டிருக்கின்றன. நத்தை இனங்கள் அவைகளின் வாழ்விடத்திற்கேற்ப 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன.

 இரவில் சுறுசுறுப்புடன் இருக்கும் நத்தைக்கு கேட்கும் திறன் கிடையாது. தன்னுடைய உடல் எடையை விட 10 மடங்கு பெரிய பொருட்களைத் தூக்கிச்செல்லும் ஆற்றல் கொண்டது.

Pages