மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 10 April 2019

நீரிழிவு நோயை குணப்படுத்தும் அதலக்காய்.

        நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய் தான். இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். நமது தமிழ் பாரம்பரியம் என்று மறக்கப்பட்டதோ, அன்றே பல நோய்கள் வந்துவிட்டது.

அதலக்காய்
     அதலகாயை பொறுத்தவரையில், உலகத்தில் எந்த நாட்டிலும் விளையாத ஒரு காய். ஆனால், இந்த காய் நம் தமிழ்நாட்டில் மட்டும் விளையக்கூடியது. இது, தமிழ்நாட்டில் விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகமாக கிடைக்கும். இந்தக் காயில் பல வகையான மருத்துவக் குணங்கள் உள்ளது.

       இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது. இந்தக்காய் அதிகமாக மழைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது. இந்தக் காய் மூலிகை செடி கொடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் விதையை எடுத்து நாம் வைத்தாலும் இந்த செடி வளராதாம். ஏன்னென்றால் இந்த செடி மழைக்காலங்களில் தானாக வளரக் கூடிய ஒரு செடி.

        நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

         மஞ்சள்காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

       உடல் எரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் அதலக்காயை தினந்தோறும் தங்களது உணவில் சேர்த்து வந்தால், உடல் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

     குடற்புழு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்று பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

Pages