மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 8 April 2019

சிலந்தி வலை ரகசியம்

வாழைப் பழத்தின் பயன்கள்..!

 உடனடி எனர்ஜி கிடைக்கும்.

 மூளைக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

 வைட்டமின் ஏ, பி6, சி, இ, கே இருக்கிறது.

 ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

 இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

 மன அழுத்தம் நீங்கும்.

 ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் கிடைக்கும்.

 பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் கிடைக்கும்.

 மலச்சிக்கல் நீங்கும்.

 அல்சரைத் தடுக்கும்.

சிலந்தி வலை ரகசியம்!

    சிலந்தி வலை, தோட்டா துளைக்காத 'கெவ்லார்" இழைகளைவிட மிகவும் பலம் மிக்கது. ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட இயற்கை சிலந்தி வலை, இன்னும் பல ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது.

    அண்மையில், 'சயின்ஸ் அட்வான்சஸ்" இதழில் வெளியான ஆய்வின்படி, குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் படும் போது, வலையின் இழைகள் லேசாக சுருங்குவதோடு, திரிந்தும் போகின்றன.

     இது ஏன் என்று ஆராய்ந்த விஞ்ஞானிகள், 70 சதவீத அளவு ஈரப்பதம் படும்போது, இழையில் உள்ள, ′புரோலின்′ என்ற அமினோ அமிலமும், நீர் மூலக்கூறுகளும் வினைபுரிவதால், திரி போல சுருள்வதும், சுருங்குவதும் நிகழ்கிறது என்று கண்டறிந்தனர்.

     சிலந்தி வலை இழைகளின் இந்த தன்மை, ரோபோக்களின் கைகள், கால்களுக்கு செயற்கை தசைகளை உருவாக்க உதவும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Pages