மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 18 April 2019

🤔 இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு???🍬🍬🍬


👉 வட துருவத்தில் குளிர்காலத்தில் சூரியன் தோன்றுவதில்லை. 186 நாட்களுக்கு தொடர்ந்து இருட்டாகவே இருக்கும்.

👉 ஒரு கிலோ குங்குமப் பூவைச் சேகரிக்க வேண்டுமானால் 1 லட்சத்து 40 ஆயிரம் பூக்களிலிருந்து அதை சேகரிக்க வேண்டும். அதனால் தான் குங்குமப் பூ அதிக விலையில் விற்கப்படுகிறது.

👉 சாலார் ஏரியில் உள்ள உப்பைக் கொண்டு உலகின் உப்புத் தேவையை 2 ஆயிரம் ஆண்டுகள் ஈடுகட்டலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

👉 லின்டன் ஜான்சன் என்பவர் தனது நண்பர்களிடம் 'அடிக்கடி வெள்ளை மாளிகையில் நான் இருப்பதுபோன்ற படத்தை காண்கிறேன் என் மனதில் அந்தப்படம் எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கிறது" என்று கூறிவந்தார். பின்னாளில் அவர் அமெரிக்க அதிபராகவும் உயர்ந்தார்.

👉 கம்பளிப் பூச்சியின் உடல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசைகளால் ஆனது. ஆனால் மனித உடலோ 700க்கும் குறைவான தசைகளால் ஆனது.

👉 ஒரு டம்ளரில் சர்க்கரையை அதிக அளவு கரைத்துவிட்டு கோழிமுட்டையை அதில் போட்டால், முட்டை மூழ்காமல் மிதக்கும்.

Pages