மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 23 April 2019

உடல் எடையை குறைக்குமா? அரிசி.... அது எப்படி?


       பழங்காலத்தில் நமது முன்னோர்கள் இயற்கையாக விளைந்த நெற்பயிரிலிருந்து அரிசியை எடுத்து அதை உணவாக தயாரித்து பயன்படுத்தினர். அதனால் எவ்வித நோய்க்கும் ஆளாகாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அவர்கள் பயன்படுத்திய பல வகையான அரிசி மற்றும் அதன் பயன்களை இங்கு பார்க்கலாம்.

        அரிசியில் கருப்பு கவுணி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி, கருத்தக்கார் அரிசி, காலாநமக் அரிசி, மூங்கில் அரிசி, அறுபதாம் குறுவை அரிசி, இலுப்பைப்பூசம்பார் அரிசி, தங்கச்சம்பா அரிசி, வாடன் சம்பா அரிசி, வாலான் சம்பா அரிசி, சூரக்குறுவை அரிசி, பிசினி அரிசி போன்ற பல்வேறு வகையான அரிசிகள் காணப்பட்டன.

         கருப்பு கவுணி அரிசியானது பழங்காலத்தில் மன்னர்கள் பயன்படுத்திய அரிசி. இந்த அரிசியை சாப்பிட்டால் புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
Image result for rice
மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட்டால் நரம்பு, உடல் வலுவாகும். 


பூங்கார் அரிசி சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஆகும்.

   காட்டுயானம் அரிசிக்கு நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய் போன்றவற்றை சரி செய்யும் சக்தி உண்டு.

கருத்தக்கார் அரிசி மலச்சிக்கல் போன்ற நோய்களை சரி செய்யும்.


      காலாநமக் அரிசியை புத்தர் சாப்பிட்டார் என கூறுவார்கள். மேலும் இந்த அரிசியை உண்பதால் மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் போன்றவைகளில் ஏற்படும் நோய்கள் சரியாகும்.

      பக்கவாதத்திற்கு இலுப்பைப்பூசம்பார் அரிசி நல்லது. மேலும் இதனால் கால்வலி சரியாகும்.

தங்கச்சம்பா அரிசி உண்பதால் பல் மற்றும் இதயம் வலுவாகும்.

   கருங்குறுவை அரிசி இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

    இரத்தம் சுத்தமாக கருடன் சம்பா அரிசியும், தோல் நோய்க்கு கார் அரிசியும் பயன்படுத்தலாம்.

       இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிக அளவு பெற கிச்சிலி சம்பா அரிசி உண்பது நல்லது.

   நீலம் சம்பா அரிசியை உண்பதால் இரத்த சோகை நீங்கும்.

     சீரகச் சம்பா அரிசி எதிர்ப்பு சக்தி கூடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

      சேலம் சன்னா அரிசி தசை, நரம்பு, எலும்பு போன்றவற்றை வலுவாக்க பயன்படுகிறது.

உடல் எடையை குறைக்க சூரக்குறுவை அரிசியை பயன்படுத்தலாம்.

அமைதியாக தூங்க வாடன் சம்பா அரிசியை உணவாக பயன்படுத்தலாம்.

     இவ்வாறு நாம் பயன்படுத்தும் அரிசியில் கூட பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அத்தகைய அரிசியை பயன்படுத்தினால் இயற்கையாகவே பல நோய்த் தாக்குதலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.

Pages