பெட்டிக்கடை, மளிகைக்கடை, கார்ப்பரேட் உணவகம், ஆபீஸ் கேன்டீன் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது சிப்ஸ். இதில்தான் எத்தனை வெரைட்டீஸ்! சரி. இது உடலுக்கு நல்லதா என்றால், `இல்லை' என்பதுதான் மருத்துவம் சொல்லும் அழுத்தமான பதில்.
1. "எண்ணெயில் தயாரிக்கப்படும் எல்லா உணவுகளுமே, உடலுக்குக் கேடு தரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்தப் புரிதலை மீறி, ஒருவரை ஓர் உணவு ஈர்க்கிறது அல்லது கவர்கிறது என்றால், அதற்கு அதன் சுவைதான் முக்கியக் காரணம். இப்படி சுவைக்கு அடிமையாகவைக்கும் ஒரு ஸ்நாக்ஸில் கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்புச்சத்து, சோடியம் என்ற மூன்று வகை சத்துகள் மட்டுமே இருக்கின்றன. இவையும்கூட, குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட்கொண்டால் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உடல் உபாதைகளை ஏற்படுத்துபவை.
2. எண்ணெயிலுள்ள கொழுப்புச்சத்துகளை, ட்ரான்ஸ் ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பாக மாற்றிவிடும். ட்ரான்ஸ் ஃபேட், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதய அடைப்பு, பக்கவாதம் போன்ற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
3. கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும்சிப்ஸ் பாக்கெட்களில், ட்ரான்ஸ் ஃபேட் அளவு வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே என சிலர் நினைக்கலாம். அதன் உண்மைத் தன்மை, பல நேரங்களில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சிப்ஸ்களில் சேர்க்கப்படும் உப்பின் சுவை, சாப்பிடுபவரை மீண்டும் மீண்டும் ஈர்க்கும் தன்மை கொண்டது. அளவுக்கதிகமாக உப்பு உட்கொள்வது ரத்த அழுத்தம், எலும்புப்புரை, சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.