மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 21 April 2019

பிரம்மிக்க வைக்கிறது!! தலைகீழாக பாயும் அதிசய அருவி !!


    இந்தியாவிலுள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் தலைகீழாக பாயும் இந்த அதிசய அருவி இருக்கு...

      புவி ஈர்ப்பு விசையின் காரணமாக மேல் வீசப்படும் எந்த ஒன்றும் கீழ் நோக்கி வருவது தான் உலக நியதி... அதிலும் நீர்வீழ்ச்சிகள் தாழ்வான பகுதிகளை நோக்கி பாயக்கூடியவை.

    ஆனால்.... புனே மாவட்டத்திலுள்ள இந்த அருவி கீழிருந்து மேலாக பாய்கிறது. தலைகீழாக பாயும் இந்த அதிசய அருவி அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது.

    மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது சிங்ககாத் மலைப்பகுதி. இந்த மலைப்பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட அருவிகள் உள்ளன.


     இதில் ஒன்றுதான் தலைகீழாக பாயும் இந்த அதிசய அருவி.... இது நமது கற்பனைக்கும் எட்டாத அளவில் அமைந்துள்ளது.

     இப்பகுதியில் வீசப்படும் காற்று அதிக அழுத்தத்துடன் வீசப்படுவதால் தான் இந்த அருவி கீழிருந்து மேல் நோக்கி பாய்கின்றது.

   காற்றின் அழுத்தமே இந்த அருவி தலைகீழாக பாய்வதற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இப்பகுதியில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிக காற்றுடன் கூடிய மழை பொழிகின்றது.

   இவ்வேளையில் தான் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து இந்த அருவியை கண்டு ரசித்து மகிழ்கிறார்கள்....

Pages