மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 16 April 2019

கோடை விடுமுறையில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!!


👪 கோடை விடுமுறை என்றாலே பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்... பெற்றோர்களுக்கு திண்டாட்டம் தான். பிள்ளைகளின் குறும்புத்தனம், ஆட்டம்பாட்டத்தைச் சமாளிக்க வேண்டுமே?

👪 கோடை விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி பார்ப்போம்.


பிள்ளைகளுக்கு :

👪 விடுமுறை நாட்களில் படுக்கையில் இருந்து தாமதமாக எழுவது பிள்ளைகளின் வழக்கமாகும். அதுவும் கோடை விடுமுறைக் காலம் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் இது சரியானது அல்ல. பள்ளி நாட்களில் எழுவது போன்று வழக்கமான நேரத்திற்கே எழுந்து விட வேண்டும்.

👪 உங்கள் இடத்தில் உள்ள பொருட்களை ஒழுங்குப் படுத்துங்கள். தேவையற்ற பழையப் பொருட்களை ஒழித்துக்கட்டுங்கள். பழைய புத்தகங்களை தகுதியானோருக்கு கொடுங்கள். ஏதாவது சிறிய சமூக சேவை செய்யுங்கள்.

👪 புது வகுப்புக்கான புத்தகங்கள், நோட்டுகளுக்கு அழகாக அட்டைப் போட்டு, லேபிள் ஒட்டி தயார்செய்து வையுங்கள். வீடியோ கேம்கள், ஸ்மார்ட்போனில் அதிக நேரத்தை ஒதுக்காதீர்கள்.

பெற்றோர்களுக்கு :

👪 கோடை விடுமுறையில் குழந்தைகளை ஒரு குறுகிய கால சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லுங்கள். சுற்றுலா என்கிற போது, ஆடம்பரமானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, அருகில் உள்ள அதிகம் அறியப்படாத இடத்திற்கு அழைத்துச் செல்லலாம்.

👪 கோடை விடுமுறையில் குழந்தைகளை உங்கள் பெற்றோரின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள். கணினி, ஸ்மார்ட்போன் தாண்டிய நிஜ உலகத்தை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

👪 விடுமுறையில் வீட்டின் சின்னச் சின்ன வேலைகளைச் செய்யப் பழக சொல்லுங்கள். அது, அவர்களின் அறை மற்றும் படுக்கையை சரிசெய்வதாகக் கூட இருக்கலாம், அலமாரியை ஒழுங்குப்படுத்துவதாக கூட இருக்கலாம்.

👪 விடுமுறையில் குழந்தைகளுக்கு சமையலின் அடிப்படையைக் கற்றுக்கொடுத்தால் கூட அது வருங்காலத்தில் அவர்களுக்கு உதவும்.

👪 தினமும் ஒரு மணி நேரமாவது குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள். உங்களின் குழந்தைப்பருவ நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Pages