மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 19 April 2019

தமிழகம், புதுச்சேரியில் இன்று 'நிழலில்லா நாள்...' உங்க ஊர்ல எப்ப தெரியுமா? #ZeroShadowDay

 

    நண்பகல் பொழுதில், தலைக்கு நேராக மேலே சூரியன் வரும்போது, நிழலில்லா சூழல் ஏற்படும். உங்கள் கால்களுக்குள்தான் அது இருக்கும். நீங்கள் குதித்தால்தான் அதைப் பார்க்கமுடியும். ஆனால், சரியாக தலைக்கு நேராக சூரியன் தினமும் வருவதில்லை. நமது பூமி, சூரியனைச் சுற்றும் கோணம்தான் அதற்குக் காரணம்.

    இதனால், வருடம் இரண்டு முறைதான் இப்படி செங்குத்தாக நமக்கு மேல் சூரியன் இருக்கும். இது, அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. சூரியனின் வடதிசையில் சுற்றிவரும்போது ஒரு முறையும், தெற்கு திசையில் சுற்றிவரும்போது ஒரு நாளும் இது நிகழும். அப்போது, சூரியன் குறிப்பிட்ட இடத்தில் துளியும் நிழலை ஏற்படுத்தாது. மகர ரேகைக்கும் (Tropic of Capricorn) கடக ரேகைக்கும் (Tropic of Cancer) இடையே இருக்கும் பகுதிகளில் இது நடக்கும். இப்படி நடக்கும் நாள்களைத்தான் 'நிழலில்லா நாள்' (Zero Shadow Day) என்கின்றனர். 

    சரியாக நீங்கள் இருக்கும் பகுதியில் எந்த நாளில் எத்தனை மணிக்கு இது நிகழ்கிறது என்பதைப் பார்க்க, கீழுள்ள இணையதளத்திற்குச் செல்லவும். 

https://alokm.com/zsd.html

      இதில், உங்கள் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தால், எந்த நாளில் எந்த நேரத்தில் உங்களுக்கு இந்த நிழலில்லா பொழுது வரும் என்பதை அது சொல்லும். இந்த ஏப்ரலுக்குப் பிறகு, மீண்டும் ஆகஸ்ட்டில் இது நிகழும். உங்கள் பகுதியில் இந்த நிகழ்வு நடக்கும் நேரத்தில் செங்குத்தான பொருள்களைச் சூரிய ஒளியில் வைத்துப் பாருங்கள் துளியும் நிழலே இருக்காது. சென்னையில், ஏப்ரல் 24 ல் காணலாம்.

Pages