ஒவ்வொரு மாதமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயின் நிபந்தனையற்ற அன்புக்கும் தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் நாளாக இது உள்ளது.
தன் பிள்ளைகள் எத்தனை தவறுகள் செய்தாலும் அதை அனைத்தையும் கடந்து தாயினால் தன் பிள்ளைகளை நேசிக்க முடியும். தேவைகளை பிள்ளைகள் உணரும் முன்பே அதை அறிந்து கவனித்துக் கொள்ள தாயினால் மட்டுமே முடியும். எதையும் எதிர்பார்க்காத உழைப்புக்கு சொந்தக்காரர்கள் அன்னையர் மட்டுமே.
தன் தாய்க்கு தன்னுடைய குழந்தைகள் சமுதாயத்தில் உன்னதமான நபர் ஆக வேண்டும். நேர்மையும் மற்றவர்களின் உழைப்பை மதிக்க கூடியவராக இருக்க வேண்டும் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். தாயின் உடலும் மனமும் தளரும் காலங்களில் அவர்களின் நலனை பாதுகாத்துக் கொள்வது மட்டுமே தாய்க்கு வேண்டியதாக இருக்கும்.
அன்னையர்களின் தியாகம் ஒரு நாள் மட்டும் பேசப்பட வேண்டியதில்லை. தாயின் தியாகம் அன்றாடம் பேசப்படக்கூடிய ஒன்று.
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..
🌹🌹🌹🌹🌹🌹
🌻🌻🌻🌻🌻🌻
🍁🍁🍁🍁🍁🍁