கைகளில் இந்த முத்திரை செய்யும்போது, மான்போல தோன்றுவதால் `மான் முத்திரை’ எனப் பெயர். இதை `ம்ருஹி முத்திரை’ என்றும் சொல்வர்.
செய்முறை :
கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும்.
நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்த நிலையில், கால்களைத் தரையில் ஊன்றிச் செய்யலாம். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டும் செய்யலாம்.
காலை, மாலை என 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே செய்ய வேண்டும்.
பலன்கள் :
மனஅழுத்தத்தால் உண்டாகும் தற்காலிக மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.
நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாக ஒரு மாதம் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்ய வேண்டும். நீர்க்கோவைப் பிரச்னையால் வரும் தலைவலி சரியாகும்.
மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.
வலிப்பு நோய் உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சியுடையோர், மன அழுத்தம், கோபம், மனசோர்வு ஆகியவை நீங்கி இயல்புநிலைக்குத் திரும்ப உதவும்.