மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 1 May 2019

சிறந்த பொன்மொழிகள்


🙂 சவாரி செய்பவன்தான் மனிதன். கடிவாளத்தைப் பிடித்திருப்பவன் கடவுள்! - யூதர்

🙂 இறைவன் கொடுத்த நல்ல சந்தர்ப்பத்தால்தான் வாழ்வில் நன்மை நடக்கிறதே ஒழிய, நாமாக ஒன்றையும் அடைந்து விடமுடியாது. வாழ்வில் சாதனை புரிந்தாலும் அதற்குக் காரணம் நானே என்று பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடாது! - தயானந்த சரஸ்வதி

🙂 இன்று நாம் செய்யும் நன்மையான காரியமே நாளைய இன்பம். - மத்வர்

🙂 நம்பிக்கை உடையோர் இறுதிவரை வெல்வர்! மிக இருண்ட காலங்களிலும் வழிகாட்டியாக இருக்கக் கூடியது நம்பிக்கையே!- ஸ்ரீ அன்னை

🙂 எல்லா உயிர்களையும் நேசிப்பதும், பிறருக்காக வாழ்வதும் எப்போதும் சந்தோஷத்தை ஒருவனுக்கு அளிக்கும்! - புத்தர்

🙂 எப்பொழுதும் முழு மனதுடன் பணியாற்றிக் கொண்டிரு. அது சோம்பேறித்தனத்தை ஓடச் செய்துவிடுவதோடு வாழ்வையும் இன்பமாக்கும்! - சாந்தானந்தர்

🙂 மகிழ்ச்சி என்ற உணர்வு இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்! - பெர்னார்ட்ஷா

🙂 போட்டி போட்டுக்கொண்டு தொண்டு செய்வதன் மூலம் பெருமையும், சந்தோஷமும் ஓடோடி வந்துவிடும்! - நாலடியார்

🙂 கல்வி என்பது புதிது புதிதாக அறிந்து கொள்வது மட்டுமல்ல!.... ஒழுக்கத்தை மேற்கொள்வது மட்டுமே சிறந்த கல்வி! - ரஸ்கின்

Pages