மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 7 May 2019

நோட்டுகளில் மார்ஜின் ஏன் விடப்படுகிறது தெரியுமா?

நோட்டுகளில் மார்ஜின் விடப்படுகிறது அல்லவா? அது எதற்கு? நாம் மோசமாக எழுதினால், அதைக் கண்டித்து டீச்சர் குறிப்பு எழுதவா?
           இல்லை. முற்காலத்தில் இவை போன்ற நோட்டுப் புத்தகங்களை எலிகள் கொறித்துவிடுவது அதிகமாக இருந்தது. அவை முதலில் ஓரங்களைத்தான் சிதைக்கும். எனவே எலி கடித்தாலும், நாம் எழுதியது பறிபோகாமல் இருக்க மார்ஜின் விடப்படும் வழக்கம் தொடங்கியது.


உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பது ஏன்?


        ஓரத்திலும் மத்தியிலும் சம அளவில் வேக வேண்டும் என்பதற்காக நடுவில் ஓட்டை போடப்படுகிறது. பேக்கரியில் கிடைக்கும் 'டோநட்'(Donut) என்னும் பண்டத்தின் நடுவில் இருக்கும் ஓட்டையும் இதே காரணத்தால்தான் போடப்படுகிறது



கூலிங் கிளாஸ் (சன் கிளாஸ்). இந்தப் பெயரைக் கேட்டதுமே சூரியனிடம் இருந்து கண்ணைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் இது பயன்படும் என்று நினைப்போம். உண்மையில் இதைக் கண்டுபிடித்தவர்கள் பனிப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 


        சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும் பனிக்கட்டிகளிடம் இருந்து கண்களைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் இவை முதலில் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட கண்ணாடிகளைச் சீனாவைச் சேர்ந்த நீதிபதிகள் அதிகமாகப் பயன்படுத்தினார்களாம். காரணம், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகளின் உணர்ச்சிகளைப் பிறர் பார்த்துவிடக் கூடாது என்பதே.


Pages