முதல்வராக கர்ம வீரர் காமராஜர் பதவியேற்ற முதல் ஆண்டு. அப்போது இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் கோட்டாவில் உண்டு. ஆனால் நூறு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர் மேஜையில் வைத்தார் சீப் செகரட்டரி.
அப்போது காமராஜர் கேட்டார் இது என்ன கோப்புகள் என்று. அதற்க்கு சீப் செகரட்டரி சொன்னார், அய்யா ஒவ்வொரு ஆண்டிலும் அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் கோட்டாவில் உண்டு. அதற்கு மாவட்ட வாரியாக நூறு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உள்ளது. இதில் இருபது விண்ணப்பங்களை நீங்கள் பொறுமையாக தேர்வு செய்து தாருங்கள் எனவும் இதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது . என்று சொன்னார் சீப் செகரட்டரி.
அதற்குக் காமராஜர் அவ்வளவு நேரம் எதற்கு உடனே தருகிறேன் என்று விண்ணப்பங்களை பார்க்கிறார் இருபதை தேர்வு செய்து சீப் செகரட்டரி யின் கையில் கொடுத்தும் விடுகிறார் . சீப் செகரட்டரி க்கு ஆச்சரியம். முதல்வரை பார்த்து கேட்கிறார் எதை வைத்து உடனே விண்ணப்பங்களை தேர்வு செய்தீர்கள் என்று.
அதற்கு காமராஜர் சொல்கிறார் "பெற்றோர் கையொப்பம்" என்ற இடத்தில் யாரெல்லாம் "கைரேகை" வைத்திருக்கிறார் களோ அவற்றைத்தான் தேர்ந்தெடுத்தேன் மேலும் முதல் தலைமுறையில் படிக்காதவர்கள் வீட்டு பிள்ளைகள் அடுத்த தலைமுறையிலாவது படித்து முன்னேறட்டுமே என்று காமராஜர் சொன்னவுடன் கண்கலங்கி நின்றாராம் சீப் செகரட்டரி.