மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 7 May 2019

🍀வண்ணக் காகிதங்களில் அழகான பொருட்கள் செய்து அசத்தும் பெரியவரிகம் மாணவர்..🌳


          பள்ளி விடுமுறை காலமான இந்த கோடையில் பல பிள்ளைகள் மொபைல் கேம், டீவி போன்றவற்றில் மூழ்கி போயிருப்பார்கள். பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை. 


        மொபைலில் மூழ்கி, மூளையை மழுங்கடிக்காமல், வண்ணக் காகிதங்கள், பழைய செய்தித்தாள்கள் மற்றும் பொருட்களில் இருந்து அழகான அலங்கார பொருட்கள் செய்து அசத்துகிறார்,  இந்த மாணவர்.


        வேலூர் மாவட்டம்,  ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் கிராமத்தில் வசிக்கும் யேசு என்பவரின் மகனான சஞ்சய் என்ற மாணவரே இந்த அசத்தலான பொருட்களை உருவாக்கியவர். 

அவரிடம் பேசியபோது,

   " நான் சிறவயதிலிருந்தே ஏதேனும் செய்து கொண்டே இருப்பேன். பெரும்பாலான பொருட்களை youtube ல் பார்த்தே உருவாக்கினேன். இந்த பொருட்களைக் கண்டு நிறைய பேர் என்னை பாராட்டி உள்ளனர். "

           என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.  இதுமட்டுமின்றி படிப்பிலும் படுசுட்டியாக உள்ளார். 

🏆🏆🏆🏆🏆🏆
அவர் செய்த பொருட்களில் சில...

 வண்ணத்துப்பூச்சிகள்
 ரோஜாக்கள்

 பழைய சேலையில் கால் மிதியடி பாய்
 அட்டை frame
 சுவர் அலங்காரம்

 ஓவியம்

 நெகிழி

பழைய சி.டி
   
     இது போன்று இன்னும் நிறைய செய்வேன் என்று பெருமிதமாய் கூறுகிறார். அவரின் திறமையை நாமும் பாராட்டுவோம் .

         விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் இது போன்று கிரியேட்டிவ் திறனை வளர்க்க ஊக்கப்படுத்த வேண்டும். 

🌹🌹🌹🌹🌹🌹🌹
www.alamaravizhuthugal.net
🌹🌹🌹🌹🌹🌹🌹

Pages