மூன்று சகோதரர்கள், ஒருவொருக்கொருவர் அச்சு அசலாக ஒரே மாதிரி இருந்தார்கள்.
அவர்களைப் பிரித்து வித்தியாசம் காண்பது இயலாத செயல்.
அதில் வயதானவன் ஜான். அவன் எப்பொழுதுமே உண்மை பேசுபவன்.
இரண்டாமவன் ஜிம் அவன் எப்பொழுதும் பொய் சொல்பவன்.
மூன்றாமவன் ஜோ அவனும் உண்மை அல்லது பொய் சொல்பவன்.
அவர்களைப் பார்க்க பிலிப் சென்றிருந்தான்.
அவனுக்கு யார் யார் என்று அடையாளம் கண்டு பிடிக்கமுடியவில்லை.
புத்திசாலித்தனமான கேள்விகள் மூலம் அவர்களை கண்டு பிடித்து விட்டான்.
என்ன கேள்விகள் என்று பார்ப்போமா?
அவன் இடப்பக்கம் இருந்தவனிடம் நடுவில் இருப்பவன் யார்? என்று கேட்டான்
அவன் சொன்னான் ஜான் என்று.
நடுவில் இருப்பவனிடம் உன் பெயர் என்ன? என்றான்
அவனது பதில் ‘ ஜோ ‘.
வலப்பக்கம் இருந்தவனிடம் நடுவில் இருப்பவன் யார்? என்று கேட்டான்
அவன் சொன்னான் ‘ஜிம்’ என்று.
மூவரிடமும் ஒரே கேள்வியைக் கேட்ட பிலிப்புக்கு மூன்று வேறு வேறான பதில்கள் கிடைத்தன.
பிலிப் விடையை கண்டு பிடித்து விட்டான். நீங்களும் முயற்சியுங்களேன்.
🌞🌞🌞🌞🌞🌞🌞
👉👉👉👉உங்கள் விடையைச் சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
🍄🍄🍄🍄🍄🍄🍄
🌻🌻🌻🌻🌻🌻🌻
ஆலமர விழுதுகள்
🌹🌹🌹🌹🌹🌹🌹
🌞🌞🌞🌞🌞🌞🌞
👉👉👉👉உங்கள் விடையைச் சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
🍄🍄🍄🍄🍄🍄🍄
🌻🌻🌻🌻🌻🌻🌻
ஆலமர விழுதுகள்
🌹🌹🌹🌹🌹🌹🌹