ஜில்... ஜில்... ஐஸ்ரிஸன்வெல்ட் குகை !!
இவற்றில் சில இயற்கையாகவே அமைந்திருந்தன. அவற்றுள் சில மனிதன் குடைந்து சுரங்கங்களாக பயன்படுத்தினர்.
நாம் வாழும் உலகில் இதுபோல் பல இடங்கள் இன்றும் காணப்படுகின்றன. பாறையாலான குகைகள் மட்டுமல்லாமல் பனியாலான குகைகளும் உள்ளன.
பனி என்றாலே உறைய வைக்கும் தன்மை கொண்டது. அதுவும் குகையே பனியால் சூழ்ந்திருந்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும் அல்லவா?...
நம் உலகில் பல குகைகள் இருந்தாலும் அவற்றுள் சில குகைகள்தான் பனிக்குகைகள்.
அவற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுவதுதான் ஐரோப்பாவின் ஆஸ்திரியா பகுதியில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் 'ஐஸ் அசுரர்களின் உலகம்' என்று பலரால் வர்ணிக்கப் படுகிற ஐஸ்ரிஸன்வெல்ட் குகை. இந்த குகைதான் உலகிலேயே மிகப்பெரிய பனிக்குகை.
உலகின் மிகப்பெரிய குகையான இது பல மில்லியன் ஆண்டுகள் பழமையானது. ஆனால், பல நூற்றாண்டு வரை யார் கண்ணுக்கும் தென்படாத இப்பனிக்குகை இன்றைய தலை முறையினருக்கு தெரிந்துள்ளது.
ஐஸ்ரிஸன்வெல்ட் குகை இன்று வரையிலும் பல நாட்டு சுற்றுலாப் பயணிகளின் 'ஜில்" தேசமாக விளங்குகிறது.
குகை உள்ள பகுதியில் கடுமையான மழை பெய்து அங்கு வெள்ளம் ஏற்பட்டு குகைக்குள்ளும் வெள்ள நீர் பாய்ந்திருக்கலாம் எனவும், பின் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக அந்தத் தண்ணீர் பனியாகியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த குகையை அடைவது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த பனிக்குகை உள்ள இடத்தை அடைவதற்கு பல ஆயிரம் அடி உயரம் பயணம் செய்ய வேண்டும்.
இதன் மொத்த நீளம் பல கிலோமீட்டராக கூறினாலும் அதன் உண்மையான எல்லை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மக்கள் இதில் ஒரு கிலோமீட்டர் வரை மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
குகைகள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது போல் காட்சியளிக்கும் இந்த இடம் இரத்தம் உறையும் அளவிற்கு குளிர் மற்றும் ஆபத்து நிறைந்த இடமாக கருதப்படுகிறது.
🏆🏆🏆🏆🏆🏆
🥕🥕🥕🥕🥕🥕