மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 4 May 2019

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்..!


    இறைவனின் படைப்பில் மனித உடல் ஒரு சிக்கலான படைப்பு என்பதை நாம் காணப்போகும் விஷயங்களால் அறிந்து கொள்ளலாம்.

   மனித உடல் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

    நம் உடலில் 37.2 டிரில்லியன் செல்களும், அவைகளில் 200 விதமான வகைகளும் இருக்கிறது.

தோல் :

      நம் தோலில் 100 பில்லியன் தோல் செல்கள் உள்ளன.

மூளை : 
    நம் மூளையில் 100 பில்லியன் நியூரான்கள் உள்ளது. நாம் மூளையில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிந்தனைகள் செய்கிறோம்.

     நம் உடலில் 60 மில்லியன் 'உணர்வு ஏற்பிகள்" (receptors) உள்ளது.

கண்கள் : 
    கண்களைப் பொறுத்தவரை 127 மில்லியன் விழித்திரை செல்கள் இருக்கிறது. இதன் பயனாகத்தான் நம்மால் 10 மில்லியன் வௌ;வேறு நிறவேறுபாட்டைக் காண முடிகிறது.

     நம் கண்களில் 120 மில்லியன் கம்பி செல்கள் (rod cells) மற்றும் 6 மில்லியன் கூம்பு செல்கள் (cone cells) உள்ளது.

      நமது கண் மட்டும் ஒரு டிஜிட்டல் கேமராவாக இருந்தால் அதன் ஒளியியல் தீர்மானம் (digital resolution) 576 மெகா பிக்சல் கொண்டதாயிருக்கும்.

மூக்கு : 
   மூக்கில் 1000 நுகர்வு ஏற்பிகள் உள்ளன. இதன் மூலம் நம்மால் 50 ஆயிரம் வௌ;வேறு வாசனைகளை வேறுபடுத்தி உணர முடிகிறது.

    நாம் தினசரி தோராயமாக 23,040 முறை மூச்சு விடுகிறோம். இதயம் தினசரி தோராயமாக 1,15,200 முறை துடிக்கிறது.

ரத்த அணுக்கள் : 

     நம் உடலில் 6 லிட்டர் ரத்தம் ஓடுகிறது. 42 டிரில்லியன் சிவப்பு ரத்த அணுக்கள் உள்ளன. இவை சுமார் 42 பில்லியன் ரத்த நாளங்களில் பயணிக்கின்றன.

இதயம் : 
 சராசரி மனிதனின் வாழ்நாளில் நமது இதயம் ரத்தத்தை உடலில் பாய்ச்சும் அளவு 1.5 மில்லியன் அளவிற்குச் சமம்.

 நமது இதயம் உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாலும் தன் துடிப்பை உடனே நிறுத்துவதில்லை. ஏனெனில் இதயத்தில் உள்ள மின்சார உந்துவிசை சிறிது நேரம் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

மயிர் : 
      நம் தலையில் சுமார் ஒரு லட்சம் மயிர்க்கால்கள் உள்ளன. தினசரி சுமார் 100 மயிரிழைகள் உதிர்கின்றன.

வியர்வை : 
   சாதாரணமாய் மனித உடலில் தினசரி சுமார் 800 மி.லிட்டர் வியர்வைகள் சுரக்கின்றன.

எலும்பு :
     ஒரு வளர்ந்த மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் 300 எலும்புகள் இருக்கும். நாளடைவில் குழந்தை வளரும்போது சில எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்து விடுகின்றன.

உமிழ்நீர் : 
       சாதாரணமாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு சுமார் 23 ஆயிரம் லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறான்.

நாக்கு : 
    நம் நாக்கில் உள்ள உணர்வு மொட்டுகள் 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

வயிறு :
       நம் வயிற்றில் சுரக்கும் அமிலம் நம் தோலின் மீது பட்டால் ஒரு துளையே உருவாகும் அளவுக்கு காரத்தன்மை நிறைந்தது.

       மனித உடலையும், அதில் உள்ள உறுப்புகளின் செயல்களையும் எண்ணிப்பார்க்கையில் ஒரு விந்தையே. இவ்வளவு அதிசயங்கள் நிறைந்த இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசே. அதை நலத்துடன் பாதுகாப்போம்.

Pages