மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 4 May 2019

பரவசமூட்டும்... பைக்காரா நீர்வீழ்ச்சி...!!


      இந்தியாவில் உள்ள மலைவாழிடங்களில் முக்கியமான ஒன்று நீலகிரியில் இருக்கும் அழகிய நீர்வீழ்ச்சியான பைக்காரா நீர்வீழ்ச்சி தான்.


      ஊட்டியிலிருந்து ஏறத்தாழ 23கி.மீ தொலைவிலும், நீலகிரியிலிருந்து ஏறத்தாழ 27 கி.மீ தொலைவிலும், கோத்தகிரியிலிருந்து ஏறத்தாழ 53கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய ஏரிதான் பைக்காரா நீர்வீழ்ச்சி.

சிறப்புகள் :       உயரமான மலைகள், அடர்ந்த காடுகள், பரந்த புல்வெளிகள், அழகான பள்ளத்தாக்குகள் காரணமாக மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டிக்கு அருகில் அமைந்துள்ள அழகிய இடம்தான் பைக்காரா நீர்வீழ்ச்சி.

 நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் பைக்காரா அருவியும் ஒன்று.

உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது. 

இது பல சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக திகழ்கிறது.


       பைக்காரா அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது, இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும்போது அருவியை போன்று ரம்மியமாக காட்சியளிக்கிறது. 


       இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த பைக்காரா அணையிலிருந்து மின் உற்பத்திக்காக நீர் திறந்து விடும்போது, அணையில் இருந்து வெளியேறும் நீர் பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும்.

      குறிப்பாக பாறைகளின் நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். 

     இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியை சுற்றிலும் பல வகையான மரங்கள் மற்றும் குளிர்ச்சி நிறைந்த இடமாக இது திகழ்கிறது.

     கோடைகாலங்களில் வெயிலில் இருந்து விடுபடுவதற்கு இது ஒரு சிறந்த இடமாக சுற்றுலாப்பயணிகளால் கருதப்படுகிறது.

Pages