மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 5 May 2019

சர்வதேச மருத்துவச்சி தினம்

சர்வதேச மருத்துவச்சி தினம்

💉 ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவச்சி தினம் மே 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.


💉 மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய்-சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப் படுகின்றனர்.

💉 இவர்கள் தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


கார்ல் மார்க்ஸ்

 உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கின்ற மாமேதை கார்ல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பிரஷ்யாவிலுள்ள ட்ரையர் நகரில் பிறந்தார்.

 இவர் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கருதப்படுபவர். 

    பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும், கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஆனால், இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்துள்ளது.

   பொதுவுடைமைக் கொள்கைகளின் முக்கியமானவர்களுள் ஒருவரான கார்ல் மார்க்ஸ் தனது 64வது வயதில் (1883) மறைந்தார். 

முக்கிய நிகழ்வுகள்

👉 1948ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் மறைந்தார். 

🏁 1903ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ்.அவிநாசிலிங்கம் திருப்பூரில் பிறந்தார்.

👉 1916ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பிறந்தார்.

 💐 1821ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி சரித்திர மாவீரன் நெப்போலியன் மறைந்தார்.

Pages