The Dog and The Donkey..!!
There lived a dog and a donkey in the house of a rich man. The dog guarded his house and the donkey helps to carry the load on him.
It was a hot afternoon. The dog was sleeping in the veranda. Some noise was heard outside. The dog just lifted up his head and went back to sleep.
The donkey asked the dog, ′Why don′t you bark. It could be thieves′. For that, the dog replied, ′Look at your work′. But the donkey would not listen. He wanted to save his master from thieves. It started to bray.
The master came out with anger. The Master asked the donkey, ′ Why are you shouting′. Without any response, the donkey again started to bray. The master gets angry and took a stick and hit the donkey.
MORAL : It is always better to mind our own work.
ஒரு பணக்காரனின் வீட்டில் ஒரு நாயும், கழுதையும் வாழ்ந்து வந்தது. நாய் அவருடைய வீட்டைக் காத்துக் கொண்டது, கழுதை அவருடைய சுமைகளை சுமக்க உதவியது.
அது ஒரு சூடான பிற்பகல் வேளை. நாய் வீட்டின் முன்பகுதியில் உள்ள திறந்தவெளி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தது. வெளியே சில சத்தம் கேட்டது. நாய் தன் தலையை தூக்கி பார்த்து விட்டு, மீண்டும் தூங்கச் சென்றது.
கழுதை நாயிடம், 'நீ ஏன் குரைக்கவில்லை. இது திருடர்களாக இருக்கலாம்". என்று கூறியது. அதற்கு நாய், 'உங்கள் வேலைப் பாருங்கள்" என்று கூறியது. ஆனால் கழுதை கேட்கவில்லை. அது எஜமானை திருடர்களிடமிருந்து காப்பாற்ற விரும்பியது. அது கனைக்க தொடங்கியது.
எஜமானி கோபத்துடன் வெளியே வந்தார். எஜமானி கழுதையிடம், 'நீ ஏன் கத்துகிறாய்" என்று கேட்டார். எந்தவொரு பதிலும் இல்லாமல், கழுதை மீண்டும் கனைக்க தொடங்கியது. கோபமடைந்த எஜமானி, ஒரு குச்சியை எடுத்து கழுதையை அடித்தார். இதைப் பார்த்து, நாய் சிரித்தது. கழுதை சோகத்துடன் உட்கார்ந்தது.
நீதி : நம்முடைய வேலையை மட்டும் செய்வது நல்லது.