தற்பொழுது பேருந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகி இருந்தது.
நேரு எந்திரத்தில் ஏறி நின்று காசு போட்டு எடைபார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர்... காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார். நேரு அவரையும் எடைபார்க்கும் படி கட்டாயப்படுத்தினார்.
அவரோ மறுத்துவிட்டார். சுற்றி நின்றிருந்தவர்களுக்கு, திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று .
அப்பொழுது நேரு சொன்னார்;
"காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும், இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இப்பொழுது இவரிடம் இருக்காது", என்றார். பிறகு காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .
தன் செலவுக்குக் கூட காசு வைத்துக் கொள்ளாத தன்னலமற்ற தலைவராக இருந்தார் காமராசர்.
நண்பர்களுக்குப் பகிர்ந்து மகிழ்வோம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
🎨🎨🎨🎨🎨🎨🎨