மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 11 May 2019

இது இரண்டு கடலா... இணையாத கடலா!!

அலாஸ்கா கடல் !!


நாம் வாழும் உலகம் ஒரு பங்கு நிலமும், மீதியுள்ள மூன்று பங்கு நீரினாலும் சூழ்ந்துள்ளது. கடலால் நமக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனால் பல நன்மைகளும் உண்டு.


கடலில் நமக்கு தெரியாமல் பலவகையான மர்மங்கள் உள்ளன. அவற்றில் பல மர்மத்திற்கு விடை இன்றும் தெரியவில்லை.


இரு கடல்கள் ஒன்றாக சந்தித்துக் கொண்டாலும் ஒன்றுடன் ஒன்று இணையாமல் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம்... உண்மைதான்... இன்று நாம் தெரிந்து கொள்ள இருக்கும் ஆச்சரியம் நிறைந்த ஒன்று அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா கடலை பற்றிதான்.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா கடற்கரை இரு வேறு நிறங்களைக் கொண்டு காணப்படுகிறது.

இது இரண்டு கடல்கள் இல்லை... கடலுக்கு அருகில் உள்ள பனிமலையில் இருந்து உருகி வரும் நீரானது ஆற்றில் கலந்து கடலில் சேர்கிறது.

இப்பனிமலையே இவ்வதிசயத்திற்கு காரணமாக திகழ்கிறது. அலாஸ்காவில் மிகப்பெரிய பனியாறுகள் உள்ளன. அதில் உள்ள ஒரு காப்பர் ஆற்றில்தான் இந்த பனி உருகி கலக்கிறது.

பின் இந்த ஆறுகளில் உள்ள களிமண் படிமங்களும், பனியான நன்னீரும் கடலில் கலக்கிறது.



பின் இந்த ஆறுகளில் இருந்து வரும் நீருக்கும், கடலில் உள்ள நீருக்கும் இடையே இருக்கும் அதிகப்படியான அடர்த்தியும், உப்புத்தன்மையும்தான் இந்த இரு நீரும் இணையாமல் இருப்பதற்கு காரணமாக அமைகின்றது.

கடலில் காணப்படும் இத்தகைய மாற்றத்திற்கு, அப்பகுதியில் உள்ள பனிப்பாறை ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் நீரில் உள்ள மண் படிவங்கள் மற்றும் அதனுள் இருக்கும் இரும்பு தாதுக்களின் தன்மைதான்.
மேலும் இக்கடல் நீரில் உள்ள உப்பின் அளவு அதிகமாக இருப்பதால் ஒன்றாக இணையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

எனவே, இது பார்ப்பதற்கு இரண்டு கடல்களை போல் காட்சியளிப்பதால் அனைவராலும் அதிகமாக கவர்ந்த ஒரு கடற்கரையாக உள்ளது.

Pages