மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 7 May 2019

தேசிய கீதத்தை இயற்றியவர் பிறந்த தினம் !

உலக ஆஸ்துமா தினம்
       உலக ஆஸ்துமா தினம் மே மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை (மே 7) அனுசரிக்கப்படுகிறது. 

      ஒருவருக்கு தொடர்ந்து சளி பிடித்தால் அவர்களுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. மேலும் இந்த நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர்.

        சிகரெட் புகை, காற்று மாசுபாடு, பாஸ்ட்புட், வாசனை திரவியம் பூசுதல் போன்ற காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் 1998ஆம் ஆண்டுமுதல் கடைபிடிக்கப்படுகிறது.

இரவீந்திரநாத் தாகூர்
       இந்திய தேசிய கீதத்தை இயற்றிய இரவீந்திரநாத் தாகூர் 1861ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

    இவர் 16வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப்பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும், மற்றொரு பாடல் வங்கதேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது.

    இவருடைய கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    ஆங்கிலேய அரசு 1915ஆம் ஆண்டு இவருக்கு சர் பட்டம் வழங்கியது. 1919ஆம் ஆண்டு அமிர்தசரசில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையால் மனம் உடைந்து சர் பட்டத்தை திருப்பி கொடுத்துவிட்டார்.

   இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் மற்றும் குருதேவ் என்று அழைக்கப்பட்ட இவர் 80வது வயதில் (1941) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

        1895ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.

   1952ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ஒருங்கிணைந்த மின்சுற்று (iவெநபசயவநன உசைஉரவை) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.

🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Pages