மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 7 May 2019

பசுமையானக் காட்சி... அமராவதி அணை...!!


       அமராவதி அணை தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி நகரில் இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது.



     அமராவதி நீர்த்தேக்கமானது 9.31 சதுர கி.மீ. பரப்பளவும், 33.53 மீ ஆழமும், 90 அடி உயரமும் கொண்டது.

     இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய நிலம் பாசனம் பெறுகிறது.

சிறப்புகள் :

         திருமூர்த்தி அணையின் தெற்கே அமராவதி ஆற்றின் குறுக்கே 1957ஆம் ஆண்டு காமராஜர் முதலமைச்சராக இருந்தபொழுது கட்டப்பட்டது.

    இந்த அணை வேளாண்மைக் காகவும், வெள்ளக் கட்டுப்பாட்டிற் காகவும் முதன்மையாகக் கட்டப்பட்டது.

     இங்கு மீன்வலைகள் வீசப்பட்டு மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஒரு மீனவர் ஒரு நாளைக்கு 20 கிலோ வரை மீன்பிடிக்க முடிகிறது.

      ஆண்டுக்கு 110 டன் மீன்கள் கிடைக்குமென வனத்துறை மதிப்பிடுகிறது. 1972ஆம் ஆண்டில் ஹெக்டேர் ஒன்றிற்கு 168 கிலோ கிடைத்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.

   இங்கு தென்னிந்தியாவின் இயற்கைச் சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரும் முதலைப் பண்ணை உள்ளது. சேற்று முதலைகள் என அழைக்கப்படும் மக்கர் முதலைகள் இங்கு பிடிபடாத நிலையில் இயற்கையாக விடப்பட்டு வளர்க்கப் படுகின்றன. 

     இவற்றின் இருப்புத்தொகை 60 பெரியவைகளாகவும் 37 சற்றே இளையவையாகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இவை மீன்கள், ஊர்வன மற்றும் பாலூட்டிகளை உண்டு வாழ்கின்றன. 



     நீர்த்தேக்கத்தின் ஓரமாக காட்டு முதலைகளின் முட்டைகள் எடுத்து வரப்பட்டு இப்பண்ணையில் குஞ்சு பொறித்து வளர்க்கப்படுகின்றன. 

   இங்கு சிறியதும் பெரியதுமான முதலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி விளையாடுவதைக் காணலாம்.

     அமராவதி அணையில் மிகச்சிறந்த முறையில் அழகான பூங்காவொன்று அமைந்துள்ளது. இந்த விளையாட்டுப் பூங்கா பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்விக்கும் தன்மை கொண்டுள்ளது.

    இவ்வணையில் உள்ள செங்குத்தான படிக்கட்டுகளில் சென்று வடக்கு பகுதியில் உள்ள சமவெளி பகுதியையும், தெற்குப் பகுதியில் உள்ள ஆனைமலை மற்றும் பழனிமலை அழகைக் காண முடிகிறது. 

      மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமைக் காட்சி வருடந்தோறும் சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்த்து வருகிறது.


🌹🌹🌹🌹🌹🌹
மேலும் பல தகவல்களைப் படிக்க..
🌹🌹🌹🌹🌹🌹

Pages