🌳🌳🌳🌳🌳🌳🌳
பப்பாளி மரம்
பப்பாளி மரம்
அறிவியல் பெயர்: காரிகா பப்பாயா
குடும்பம் : காரிகாசியே
பப்பாளி அதிக ஊட்டச் சத்துக்களைக் கொண்டு எல்லா காலங்களிலும், விலை மலிவாகவும், எளிதாகவும் கிடைக்கும். எல்லா மண் வகைகளிலும் வளரும் தன்மை உடையது. பப்பாளியின் தாயகம் மெக்ஸிகோ. இந்தியா பப்பாளி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. உலகில் 42 சதவீதம் பப்பாளி இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது. "வீட்டுக்கு ஒரு பப்பாளி, இனி யாரும் இல்லை சீக்காளி' எனும் சொல் பாட்டாளியின் பெருமையை உணர்த்துகிறது.
👉👉👉👉👉👉
சத்துகள்: பப்பாளி பழத்தில் விட்டமின் "சி' சத்தும் "ஏ' சத்தும் அதிகமாகவுள்ளது. மேலும், "பி1' (தயாமின்), "பி2' (ரிபோஃப்ளோவின்), "பி3' (நியாசின்), "பி5' (பான்டாதெனிக் அமிலம்) "பி6' (பைரிடாக்ஸின்), மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம் ஆகிய சத்துகள் உள்ளன. மேலும் கார்போஹைட்ரேட்கள், புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, ஃபோலட்டுகள் போன்றவையும் உள்ளன.
🌮🌮🌮🌮🌮🌮🌮🌮🌮பயன்கள்:
பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும். மேலும், செரிமான மண்டலத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றி செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தும்.
🌮🌮🌮🌮🌮🌮🌮🌮🌮பயன்கள்:
இது பித்தத்தைப் போக்கும், கல்லீரல், கணையம், சிறுநீரக நோய்களை குணப்படும்.
இரத்த சோகைக்கும், புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
சோரியாஸிஸ், முகப்பரு போன்ற சரும நோய்களுக்கு சிறந்த நிவாரணி, பப்பாளி பழத்திலுள்ள பாப்பைன் நொதியானது சருமத்தில் உள்ள மாசுகளை நீக்குகிறது.
பப்பாளி இலையை மையாக அரைத்துத் தீப்புண்கள் மீது தடவினால், புண்கள் விரைவில் ஆறிவிடும்.
பப்பாளி இலையை மையாக அரைத்துத் தீப்புண்கள் மீது தடவினால், புண்கள் விரைவில் ஆறிவிடும்.
பப்பாளியில் காணப்படும் கைமோபாப்பைன் என்ற நொதியானது முடக்கு வாதம், கீல்வாதம் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும்.
பப்பாளியானது பொதுவாக உணவினை நன்கு செரிக்க செய்யும். அதாவது, பப்பாளியில் உள்ள பாப்பைன் என்ற நொதியானது புரதத்தினை உடைத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் புரதமானது கொழுப்பாக மாற்றப்படுவது தடை செய்யப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா, புரதச் சத்து நன்கு செரிக்கப்படாவிட்டால் அது வாதம், சர்க்கரை நோய் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட நோய்களை உண்டாக்கி விடும். பப்பாளியிலுள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கிறது.

மதிய இடைவேளையில் உணவாக உட்கொண்டு இதய நலத்தை பாதுகாக்கலாம்.
பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும். மேலும், செரிமான மண்டலத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றி செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தும்.
வயோதிகத்தால் கண் தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மங்கலான பார்வை மற்றும் பார்வைக் குறைபாடு ஏற்படும், பப்பாளியில் உள்ள பீட்டா கரோடீன்கள் இந்த நோய் ஏற்படாமல் தடை செய்கிறது. தினமும் பப்பாளி பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் கண் தசை அலர்ஜி நோய் ஏற்படுவது குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பப்பாளி இலைத் தண்டை உறிஞ்சியாக இளநீர் போன்ற பானங்கள் குடிக்க பயன்படுத்தலாம்.
பப்பாளி பழத்தை அளவுக்கதிகமாக உண்ணக்கூடாது. ஏனெனில் சில சமயம் அதிகமாக உண்டால் வாந்தி, வயிற்று வலி, குமட்டல் ஏற்படும்.
அளவோடு அடிக்கடி உணவில் சேர்த்தால் நல்ல செரிமானத்தை கொடுக்கும்.
🍅🍅🍅🍅🍅🍅 மரங்களைக் காப்போம், வளம் பல பெறுவோம், ஆரோக்கியமாக வாழ்வோம்.

🌳🌳🌳🌳🌳🌳
ஆலமர விழுதுகள்
🍀🍀🍀🍀🍀🍀