மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 3 June 2022

கொடுங்கள்.. திரும்ப கிடைக்கும்

The valuable gift

      A young boy named Mohan longs to have a bicycle of his own and ride it everywhere he goes. But his father does not earn enough to buy a bicycle for him.



      One day, while on his way to school, Mohan sees a boy riding a sturdy cycle. While taking a turn, the cycle skids, and the young boy gets badly hurt. Mohan rushes to help and takes him to a doctor for first aid. Later, he helps the boy to get home.


      The boy belongs to a wealthy family, and his parents see Mohan helping their son. As a reward for his kindness, they present new bicycle to Mohan.


Moral of the story : 
         Be helpful and loving when others need it and it will come back to you.


தமிழில் :

     மோகன் என்ற ஒரு சிறுவன் தான் சொந்தமாக ஒரு மிதிவண்டியை வைத்து அவன் செல்லும் எல்லா இடங்களுக்கும் சவாரி செய்ய ஏங்கினான். ஆனால் அவனுடைய தந்தை அவனுக்கு மிதிவண்டி வாங்குவதற்கு போதுமான அளவு சம்பாதிக்கவில்லை.


    ஒரு நாள், பள்ளிக்குச் செல்லும் போது, ஒரு சிறுவன் வலிமைமிக்க மிதிவண்டியில் சவாரி செய்வதை மோகன் கண்டான். அந்த சிறுவன் ஒரு வளைவில் திரும்பும்போது சறுக்கி விழுந்து காயமடைந்தான். மோகன் விரைந்து வந்து முதலுதவிக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். பின்னர், அவன் சிறுவனை வீட்டிற்கு அழைத்துச்செல்ல உதவினான்.


      காயம்பட்ட அந்த சிறுவன் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன், அவனது பெற்றோர் மோகன் தங்கள் மகனுக்கு உதவியதைப் பார்த்து, அவனது உதவிக்கு வெகுமதியாக, மோகனுக்கு ஒரு புதிய மிதிவண்டியை வழங்கினார்கள்.


கதையின் கருத்து : 
     மற்றவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவியையும் அன்பையும் கொடுங்கள், அது உங்களிடம் திரும்பி வரும்.


Pages