மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 5 August 2019

கள்ளன் வாரான்... களவாணி வாரான்... விளையாட்டு

கள்ளன் வாரான்... களவாணி வாரான் !!

🌟என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் பழங்காலத்தில் விளையாடிய விளையாட்டுகளுக்கு தனி மவுசுதான்.

🌟ஓடி ஆடி விளையாடிய காலம் போய் இன்று விளையாட்டுகள் கைக்குள் அடங்கும் மொபைல் போன்களில் வந்துவிட்டதால் குழந்தைகள் வெளியில் விளையாட வருவதில்லை.

🌟நாகரீகம் வளர்ந்து வருவதால் பல விளையாட்டுகள் நமக்கு மறந்து போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு மறந்து போன விளையாட்டுகளில் ஒன்றான கள்ளன் வரான்... களவாணி வரான்... விளையாட்டை பற்றிதான் இன்று தெரிந்து கொள்வோம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

பல பேர் ஒன்று சேர்ந்து விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

🌟அனைத்து குழந்தைகளும் ஒருமனதாக இருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

🌟இவர்கள் இருவரும்தான் விளையாடப்போகும் நபர்கள். மற்ற அனைவரும் ஒரே வரிசையில் கீழே சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.

🌟கீழே அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். அனைவரும் சேர்ந்து தேர்வு செய்தவர்களில் முதல் நபர் முன்னால் நிற்பார். இரண்டாம் நபர் தன் கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

'காயே கடுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
உப்பே புளியங்கா
ஊறவச்ச நெல்லிக்கா
கல்லன் வாரான் காரைக்குடி
கல்லை நீயும் கண்டுபிடி"


   என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல போக்கு காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்துவிடுவார். வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்கு போடுங்க என்பார்.

🌟எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை முதல் நபர் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்துவிட்டால் கல்லை கண்டுபிடித்தவருக்கு ஒரு மதிப்பெண்.

🌟கண்டுபிடிக்காவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண். இவ்வாறே தொடர்ந்து விளையாட வேண்டும்.

🌟மேலும் இந்த விளையாட்டை இதேபோல் வேறு இரண்டு நபர்களினை தேர்வு செய்து விளையாட வேண்டும்.

பலன்கள் :

🌟புத்திக்கூர்மை மேம்படும்.

🌟கண்டறியும் திறன் மேம்படும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹

Pages