மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 29 January 2020

இதயத்துடிப்பை பாதுகாக்கும்..... புளியமரம்

புளிய மரம்

        புளியமரம் பெரியதாக வளரும் மரங்களில் ஒன்று. பசுமையான மரம் 80 அடி உயரம் வரை வளரும் அதனை சுற்றி 30-35 அடி விட்டத்துக்கு பரவும் கிளைகளுடைய பெரிய மரம். தாமரின்டஸ் இண்டிகா என்ற அறிவியல் பெயர் கொண்ட புளி பபேசி யேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. 


    உரங்கள் தேவை. விதையை நட்டு உருவாகும் புளிய மரங்கள் 6-8 வருடங்களில் பலன் தரும். செடியாக நடப்பட்ட மரங்கள் காய்க்க 3-4 வருடங்கள் போதும். மெதுவாக வளரும் புளியமரம் அதிக ஆயுள் உள்ளது. 

      நன்கு வளர்ந்த புளியமரம், ஒரு வருடத்திற்கு 160 கிலோ வரை புளியை சராசரியாக தரும். 


புளிய மரத்தின் தன்மைகள் : 

      புளிய மரத்தின் கீழே வேறு செடிகள் வளராது. இரவில் புளிய மரத்தின் கீழே படுத்து உறங்குவது கூடாது. ஆடு, மாடுகள், குதிரை இவற்றை இம்மரத்தின் கீழ் கட்டக் கூடாது. புளி அதிகமாக காய்த்தால், மாங்காய் உற்பத்தி குறையும். புளிய மரம் அதன் சுற்றுப்புறத்தை சூடாக்கும். 


புளிய இலையின் பயன்கள் : 

இது வயிற்றை சுத்தபடுத்தி கிருமிநாசினிகளை அளிக்கிறது. 

புளி இலை ஒரு ஆயுர்வேத மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. 

புளி இலை இரைப்பை பிரச்சனை, செரிமானப் பிரச்சனை போன்றவற்றை தீர்த்து இதயத்துடிப்பை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. 

புளி இலைகளை மூலிகை தேநீர் செய்து குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம். 

புளி இலைகள் காபி தண்ணீரில் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை மற்றும் புண்களை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். 

புளி இலை சேர்த்த காபி குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை அளிக்கிறது. 


புளியின் பயன்கள் : 
    புளியில் கால்சியம், வைட்டமின் பி பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. உணவில் மணமூட்டவும், சுவையூட்டவும் புளி பயன்படுகிறது. 

புளியங் கொட்டையில் 63 சதவீதம் மாவுப்பொருட்களும், 14 - 18 சதவீதம் ஆல்புமினும், 4.5 - 6.5 சதவீதம் பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன. 


புளிய மரத்தின் மருத்துவ குணங்கள் : 

பிலிப்பைன்ஸில் இலைகள் டீ யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுத்தப்படுகிறது. 

புளி நீரை கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப் போட்டால் ரத்தக் கட்டுகள் கரையும். 

புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட்டால், தேள் விஷம் இறங்கும். 
புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும். 

புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும். 

புளியமரம் கடினமான பலமான மரம். புழு, பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படாதது. எனவே, ஃபர்னிச்சர் தயாரிப்பில் நன்கு உபயோகப்படுகிறது. 


Pages